கோடையிலும் தொட்டியில் தண்ணீர் சில்லுன்னு இருக்கணுமா? இப்படி செய்ங்க
பொதுவாகவே கோரட காலம் வந்துவிட்டால் வீட்டுக்குள்ளும் இருக்க முயாது வெளியிலும் செல்ல முடியாது என்கின்ற அளவுக்கு வெப்பம் அதிகரித்துவிடும்.
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக ஒரு குளியலை போடலாம் என நினைத்தால் தண்ணீர் தொட்டி வெயிலில் இருந்து குளிர்நீரை வெந்நீராக மாற்றி வைத்துவிடுகின்றது. இந்த தண்ணீரில் குளிப்பதற்கு வெயிலில் இருப்பதே பரவாயில்லை போல் இருக்கும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு தேடுறீங்களா? கோடையில் தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை எப்படி குளிர்ச்சியாகவே வைத்துக்கொள்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த முறைகளை் தீர்வு கொடுக்கும்
தண்ணீர் தொட்டிகள் பெரும்பாலும் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகின்றது. கருப்பு நிறம் சூரிய வெப்பத்தை ஊறிஞ்சிக்கொள்ளும் தன்மை கொண்டது.
அதனால் தண்ணீர் வெப்பமாகின்றது அதனை தவிர்ப்பதற்கு தண்ணீர் தொட்டிக்கு வெள்ளை நிறத்தில் பெயின்ட் பயன்படுத்துவதால் தண்ணீரை நீண்ட நேரம் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.
தண்ணீர் குழாய்கள் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் தண்ணீர் தொட்டியில் உள்ள நீர் விரைவில் வெப்பமாகின்றது. அதனை தவிர்க்க குழாய்களை மூடும் கவர்களை பயன்படுத்தலாம். அதனால் தொட்டியில் உள்ள தண்ணீர் நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கும்.
தண்ணீர் தொட்டியை சூரிய ஒளி படும் இடத்தில் நேரடியாக வைத்திருப்பதால் அதிலிருக்கும் தண்ணீர் சூடாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தண்ணீர் தொட்டியை சூரிய ஒளி படாத இடத்திற்கு மாற்றுவதும் தீர்வு கொடுக்கும்.
அல்லது தண்ணீர் தொட்டியை ஒளி உட்செல்லாத வகையில் கோணி பை மற்றும் கவர்களை பயன்படுத்தி மூடி வைப்பது தண்ணீரை ஒரளவுக்கு குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
தண்ணீர் தொட்டிக்கு அடியில் மண்ணை நிரப்பி அதன் மேல் தொட்டியை வைத்தால், தண்ணீரை ஓரளவு குளிர்ச்சியாக வைத்திருக்க முடியும். இந்த முறைகளை பின்பற்றினால் கோடையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |