வீட்டில் துளசி செடி வைத்திருக்கின்றீர்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கவனீங்க
பொதுவாக இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துளசி மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றது. துளசி என்பது இந்திய புராணங்களிலும் இந்து தத்துவத்திலும் குறிப்பிடத்தக்க ஒரு மூலிகையாகும்.
வீட்டில் துளசியை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை தரும் என்பது ஐதீகம். ஆனால் துளசியை நட்டுவிட்டால் அதிர்ஷ்டம் கிடைத்துவிடும் என்று அர்த்தம் அல்ல, அந்த துளசியை நன்றாக பராமரிக்க வேண்டும்.
என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வீட்டில் துளசி செடியை வைத்திருந்தால் எந்த விடயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துளசி செடியை ஒருபோதும் வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க கூடாது.
தெற்கு திசை பித்ருவுக்குரியது என்பதால் அந்த திசையில் துளசியை வைக்கவே கூடாது. அதனால் பெரும் பணகஷ்டம் ஏற்படும்.
துளசி செடி மிகவும் புனிதமானது இதனை குப்பைகள் அல்லது செருப்புகள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் ஒருபோதும் வைக்கவே கூடாது. துளசி செடியை எப்போதும் மண் பானையில் மாத்திரமே வைக்க வேண்டும்.
வீடடில் வளர்க்கும் துளசி செடியை எப்போதும் செழிப்புடன் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். துளசி செடி காய்ந்து போவது அல்லது அழுகிப்போவது குடும்பத்துக்கு துர்திஷ்டத்தை ஏற்படுத்தும்.
பச்சையாக இருக்கும் துளசி செடி திடீரென காய்ந்து போனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகள் இருப்பதையே இது உணர்த்துகின்றது இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வீடடில் இருக்கும் துளசி செடியை சரியாக பராமரிக்காத போது குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அதே போல் வீட்டில் துளசி செடி காயாமல் செழிப்பாக இருக்கும் பட்சத்தில் லட்சுமியின் ஆசீர்வாதம் முழுமையாக இருப்பதாக அர்த்தம். இப்படி இருக்கும் வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |