அரிசி, பருப்பு, தானியங்களில் வண்டு உருவாவதை தடுக்கணுமா? இதை செய்தாலே போதும்
பொதுவாகவே தொன்றுதொட்டு வீடுகளில் அரிசி பருப்பு போன்ற தானியங்களை மொத்தமாக வாங்கி சேமித்து வைக்கும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது.
குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு தேவையான பொருட்களை முன்கூட்யே சேமித்து வைத்துக்கொள்வது வழமை தான்.
ஆனால் இவ்வாறு சேமித்து வைக்கும் பொருட்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் வண்டுகள் மற்றும் புழுக்கள் உருவாக ஆரம்பித்துவிடும்.
குறிப்பாக அரிசி மற்றும் பருப்பு போன்ற தானியங்களில் இவ்வாறு வண்டுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை வீட்டில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை கொண்டே எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
வேப்பிலை
பொதுவாகவே வேப்பிலையில் கிருமி ஒழிப்பு பண்புகள் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் வேப்ப மரத்தை எந்த பூச்சிகளும் தாக்குவது கிடையாது.
எனவே இது உணவுப்பொருட்களை வண்டுகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க சிறந்த தெரிவாக இருக்கின்றது.
வேப்பிலையை நிழலில் இரண்டு நாட்கள் வரையில் உலர்த்தி, அரிசி மற்றும் இதர தானிய வகைகளை சேமித்து வைத்துள்ள கலன்களில் அதனை போட்டு வைத்தால் எந்தவித பூச்சி மற்றும் புழுக்களும் அண்டாது.
முழு மிளகாய் வத்தல்கள்
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வரமிளகாய் மிகவும் காரமானதாக இருக்கும். இதனை முகர்வதற்கு நம்மால் முடியாமல் இருக்கும்.
எனவே இதனை தானியங்கள் வைத்துள்ள கலனில் போட்டு வைத்தால் பூச்சிகள் மற்றும் வண்டுகள் உருவாவதை இது தடுக்கும்.
பிரிஞ்சி இலை
சமையலில் மணமூட்டவும், சுவையூட்டவும் பயன்படுத்தப்படும் பிரிஞ்சி இலை மிகுந்த வாசனை கொண்டதாக இருக்கும். இந்த இலைகள் குறிப்பாக அசைவ உணவுகள் சமைக்கும் போதே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
இது எந்த அளவுக்கு நமக்கு பிடித்தமானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பூச்சிகளுக்கு பிடிக்காத வாசனையாக இருக்கின்றது.
அதனை அரிசி, பருப்பு போன்றவற்றை சேமித்து வைத்துள்ள கலன்களில் போட்டு வைத்தால் பூச்சி மற்றும் புழுக்கள் உருவாவது தடுக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |