மதுரை பாணியில் மட்டன் கீமா... வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி?
மட்டன் கொத்துக்கறி வைத்து தயாரிக்கப்படும் மட்டன் கீமாவை வெள்ளை சாதம், சப்பாத்தி, தோசை, பூரி, நாண், புலாவ் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டிலேயே எளிதாக சுவையான மட்டன் கீமாவை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
சோம்பு - 1/2 தே.கரண்டி
கிராம்பு - 2
கல்பாசி - சிறிது
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1தே.கரண்டி
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தக்காளி - 2 (அரைத்து கொள்ளவும்)
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 1மேசைக்கரண்டி
சீரகத் தூள் - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தே. கரண்டி
மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை - 1/2
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கிராம்பு, கல்பாசி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் மஞ்சள் தூள் மற்றும் அரைத்த தக்காளியை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து 1 நிமிடம் வரையில் நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும்.
அதற்கு பிறகு மட்டன் கொத்துக்கறியை நீரில் நன்கு கழுவி விட்டு, வாணலியில் உள்ள மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற்றி, குழம்பு மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.
15 நிமிடங்களின் பின்னர் மூடியைத் திறந்து கீமாவைக் கிளறி, அத்துடன் சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், மதுரை ஸ்டைலில் சுவையான மட்டன் கீமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |