பல்லிகளை வீட்டில் இருந்து அடியோடு விரட்டும் எளிய வழிமுறைகள் இதோ
வீட்டில் இருக்கும் பல்லிகள் வீட்டை விட்டு அடியோடு விரட்ட என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.
பல்லிகளை விரட்டும் வழிமுறை
பல்லிகள் பார்ப்பதற்கு தீங்கற்ற உயிரினங்களாகத் தோன்றினாலும், பலருக்கு அவை அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்துகின்றன. சிலர் அவற்றைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார்கள்.
உண்மையில், இவை பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுகின்றன என்றாலும், அவை விட்டில் ஆங்காங்கே ஊர்ந்து சென்றால் பார்க்க அருவருப்பாக இருக்கும்.
இப்படி பல்லிகளை பார்க்க பிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த பதிவை படித்த பின்னர் அந்த பிரச்சனை இருக்காது.

பல்லி தொல்லைக்கு முக்கிய காரணம் அவை உணவு தேடி உங்கள் வீடுகளுக்குள் நுழைவதுதான். அவற்றுக்கான உணவு கொசுக்கள், ஈக்கள், எறும்புகள், அந்துப்பூச்சிகள் மற்றும் சிலந்திகள் போன்ற சிறிய பூச்சிகள்.
எனவே, இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தினாலே வீட்டில் பல்லிகள் இருக்காது.
பல்லிகள் கடுமையான வாசனைகளை விரும்பாது. இப்படியான வாசனைகளட இயற்கையில் நிறையவே உள்ளது.
நச்சுத்தன்மையற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இயற்கை விரட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், பல்லிகள் நம் வீட்டை விட்டு விரட்டி விடலாம்.

சில குறிப்பிட்ட வாசனைகளுக்கு பல்லிகள் அதிகமான அருவருப்பை உணர்வதால், அவை அந்த இடங்களில் தங்காமல் தூரமாக சென்றுவிடும்.
இதற்கு - பூண்டு மற்றும் வெங்காயத்தைப் பயன்படுத்தி வீட்டிலேயே சிலவற்றைச் செய்யலாம். இதுபோன்ற பொருட்களை நசுக்கி வீட்டின் ஜன்னல் அல்லது திறந்தவெளி மூலைகளில் வைப்பது நல்லது. இதற்கு நபதலின் உருண்டைகளையும் பயன்படுத்தலாம்.
பல்லிகள் பொதுவாக குளிர்ச்சியான, ஈரமான மற்றும் இருண்ட மூலைகளால் ஈர்க்கப்படுகின்றன. அவை சமையலறைகள், குளியலறைகள் மற்றும் சேமிப்பு அறைகளுக்குள் ஒளிந்து கொள்ளும்.

எனவே சுற்றுச்சூழல் சாதகமற்றதாக மாறும்போது, பல்லிகள் இயற்கையாகவே வெளியேறும். பல்லிகள் பெரும்பாலும் இடைவெளிகள், விரிசல்கள் மற்றும் துவாரங்கள் வழியாக நுழைகின்றன.
அவை பெரும்பாலும் புகைப்பட பிரேம்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கின்றன. இந்த உள்ளீடுகளைத் தடுப்பதன் மூலம், பல்லிகள் உள்ளே வருவதைத் தானாகவே தடுக்கலாம்.

பல்லிகளுகளுக்கு முட்டைகள் என்றால் பிடிக்காது. அதள் வாசனையை பல்லிகள் முற்றாக வெறுக்கும். எனவே வீட்டின் மூலைகளில் வெற்று முட்டை ஓடுகளை வைக்கலாம்.
எனவே, பல்லிகளை விலக்கி வைப்பதற்கு எப்போதும் கடுமையான நடவடிக்கைகள் தேவையில்லை. இந்த எளிய மற்றும் பாதுகாப்பான முறைகள் அனைத்தும் இந்த ஊர்ந்து செல்லும் உயிரினங்களை உங்கள் வீட்டிலிருந்து விலக்கி வைக்க உதவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |