உங்க மொபைல் போன் திரையை எப்பவும் பளபளன்னு வைக்கணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கையிலும் மொபைல் போன் இருப்பது சாதாரண விடயமாகிவிட்டது.
கண்விழிப்பதும் இரவு படுக்கைக்கு சென்று தூங்குவதற்கு முன்னர் இறுதியாய் பார்பதும் மொபைல் போன் தான் என்றால் மிகையாகாது.
அந்தளவுக்கு மொபையில் போன் பாவனை அதிகரித்துவிட்டது. இப்படி தினசரி பயன்படுத்தும் மொபைல் போனை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
மொபைல் போன் திரையை அழுக்கு, தூசி, கறைகள் இல்லாமல் கவனமாக பாதுகாப்பது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
போன் திரையை இலகுவில் சுத்தப்படுத்த...
மொபைல் போன் திரையை மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்தி சுத்தம் செய்வதால், கீறல் விழாமல் கைரேகைகளையும் கூட சிறப்பாக சுத்தம் செய்யலாம்.
மொபைல் போன் திரையில் விழும் கோடுகளைத் தவிர்க்க, காய்ச்சி தண்ணீரைக் குறைவாகப் பயன்படுத்தித் சுத்தம் செய்யலாம்.
கடுமையான அழுக்கு அல்லது கிருமிநாசினிக்கு, 70% ஐசோபிரைல் ஆல்கஹால் கரைசலை குறைவாகப் பயன்படுத்தலாம். ஒருபோதும் அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.
ப்ளீச் மற்றும் பிற கடுமையான ரசாயனங்களை பயன்படுத்தி சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தினால், ஸ்கிரின் பாதிக்கப்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
எப்பொழுதும் மொபைலை சுத்தம் செய்வதற்கு முன் ஸ்கிரீனை ஆஃப் செய்துவிட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
தூசி மற்றும் கறைகளை அகற்ற உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்தித் துடைக்க வேண்டும். அதையும் மென்மையாக பயன்படுத்த வேண்டும். மிகவும் கடினமாக அழுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மொபைல் கேஸைக் கழற்றிவிட்டு சுத்தம் செய்ய வேண்டும். மீண்டும் திரையை ஆன் செய்வதற்கு முன் முழுமையாக உலர வைக்க வேண்டும்.போன் திரையை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தவறாமல் சுத்தம் செய்வது நல்லது.
மொபைல் போன் திரையை சுத்தம் செய்யும் போது திரையில் நேரடியாக திரவங்களை தெளிக்கவோ அல்லது ஊற்றவோ கூடாது. இது உள்ளே ஊடுருவி சேதத்தை ஏற்படுத்தலாம்.
ப்ளீச், விண்டோ கிளீனர் அல்லது பாத்திர சோப்பு போன்ற கடுமையான ரசாயனங்களை பயன்படுத்தக் கூடாது. இந்த முறையை கையாள்வதன் மூலம் மொபைல் போன் திரை எப்போதும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |