வாழைப்பழத்தை நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்கணுமா? இதோ எளிய வழிகள்!
பொதுவாகவே வாழைப்பழம் எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த பழமாக அறியப்படுகின்றது.
அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் பட்டியலில் வாழைப்பழம் முக்கிய இடத்தை பிடிக்கும் வாழப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது.

பல்வேறு நோய்களை போக்க வாழைப்பழம் பெரிதும் துணைப்புரிகின்றது. இருப்பினும் வாழைப்பழத்தை வீடுகளில் சேமித்து வைப்பது மிகவும் கடினமாக விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
காரணம் மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் வாழைப்பழம் விரைவில் பழுதடைந்துவிடுவதால், அதனை வீடுகளில் நீண்ட நாட்கள் களஞ்சியப்படுத்தி வைப்பது சவாலான விடயமானவே பார்க்கப்படுகின்றது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில்,வாழைப்பழம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வேண்டுமென்றால் எவ்வாறான வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எளிய வழிகள்
வாழைப்பழத்தை ஹேங்கரில் மாட்டி அல்லது கயிற்றில் கட்டி காற்றோட்டமாக தொங்க விட்டால் நீண்ட நாட்களுக்கு வாழ்ப்பழம் அழுகாமலும் அதிகம் பழுத்து கருப்பு புள்ளிகள் தோன்றாமலும் இருக்கும்.

அல்லது நியூஸ் பேப்பரில் சுற்றிய படி வாழைப்பழத்தை வைத்தால் வேகமாகப் பழுக்காமல் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
வாழைப்பழத்தை மாதக்கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்றால், ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தலாம்.

வாழைப்பழங்கள் அவற்றின் தண்டுகள் வழியாக எத்திலீன் வாயுவை வெளியிடுகின்றன. அதிக வாயு வெளியிடப்படுவதால், பழம் விரைவில் பழுக்கும். எனவே தண்டுகளின் முனைகளை பிளாஸ்டிக் உறையில் சுற்றினால், இந்த வாயு வெளியேறுவதைத் தடுக்கலாம் அல்லது மெதுவாக்கலாம்.

வாழைப்பழத்தை தோலுடன் வினிகரில் போட்டு ஊற வைத்து பின் எடுத்து வைத்தால் வாரக்கணக்கில் அழுகாமல் அப்படியே இருக்கும். இதில் ஏதாவது ஒரு முறையை பயன்படுத்தி வாழைப்பழத்தை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |