வறுமை நீங்கி கோடீஸ்வர யோகம் தரும் பரிகாரம்- யாரெல்லாம் செய்யலாம்?
ஒருவருடைய வாழ்க்கையில் வறுமை வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலை வந்து விடும்.
அப்படி மற்றவர்களிடம் பணம் வாங்கினால் அதனை சரியான நேரத்தில் திருப்பிக் கொடுப்பது கடனாளியின் கடமையாகும்.
ஜோதிடத்தின்படி, ஒருவர் கடன் வாங்குவதற்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் எனக் கூறப்படுகிறது. செவ்வாய் பகவானுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் முருகப்பெருமானாகும்.
ஆகவே தீராத கடன் பிரச்சினைகள் இருப்பவர்கள் முருகப்பெருமானை தொடர்ந்து வழிபட வேண்டும். அப்படி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை என்றாலும் பொருளாதார சிக்கல்கள் வராமல் இருப்பதற்காக முருகனை வழிபட வேண்டும்.
அந்த வகையில், தீராத கடன் பிரச்சினைகள் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தால், அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கடன் பிரச்சினைகள் தீர பரிகாரம்
1. முருகப்பெருமானை வழிபாடு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் ஒன்று தான் நீண்ட நாட்கள் தீராமல் இருக்கும் கடனை தீர்க்கும்.
2. கடன் பிரச்சினைகள் அதிகமாக இருப்பவர்கள் செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இதனால் உங்களின் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம்.
3. கடன் பிரச்சினைகள் உள்ளவர்கள் தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு தீபம் ஏற்ற வேண்டும். இந்த பரிகாரம் உங்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும்.
4. செவ்வாய்க்கிழமைகளில் நாம் ஏற்றும் தீபம் சந்திராஷ்டமமாக இருந்தால் ஏற்றக் கூடாது.
5. காலையில் எழுந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் போல் வழிபாட்டிற்கு அனைத்தையும் தயார் செய்து வழிபாடு நடத்துவது அவசியம். அதுவும் குறிப்பாக முருகனை வழிபட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).