திருமண வாழ்க்கையில் காதலை அதிகரிக்கணுமா? வாஸ்து சொல்லும் 5 வழிகள்
பொதுவாவே நாம் அலங்கார பொருட்களாக வீட்டில் வைத்திருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுதாக வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில பொருட்கள் வீட்டின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் அதிர்ஷ்டத்தையும் பிரகாசமாக்குவதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கத்தை அதிகரிக்க படுக்கையறையில் வைக்க வேண்டிய சில முக்கிய அலங்கார பொருட்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
ராதாகிருஷ்ணர் படம்
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் வாழ்க்கை முழுதும் ஆரம்பத்தில் இருந்த அதே காதல் மற்றும் விருப்பம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால், படுக்கையறையில் ராதாகிருஷ்ணரின் சிலை அல்லது படத்தை வைப்பது சிறந்த பலன்களை கொடுக்கும்.
இந்த சிலை வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகம் ஈர்ப்பதுடன் மனஅழுத்தத்தையும் குறைத்து மனதிற்கு அமைதியை கொடுக்கும். இந்த சிலையை படுக்கையறையில் வைத்தால் திருமண வாழ்ககை காதல் நிறைந்ததாக இருக்கும்.
மாண்டரின் வாத்து ஜோடி
பெங் சுய் இல் இந்த வாத்து ஜோடி மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது. வாஸ்து சாத்திரத்தின் பிரகாரம் இதைனை படுக்கையறையில் வைத்திருப்பதால், கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
பூச்செடிகள்
வாஸ்து அடிப்படையில் படுக்கையறையில் அழகிய பூக்களை கொண்ட இரண்டு பூச்செடிகளை வளர்ப்பது எதிர்மறை எண்ணங்களை அகற்றி நல்ல தெளிவைான சிந்தனையை கொடுக்கின்றது.
இந்த செடிகளை கவனமான பராமரித்து வாடாது வைத்திருந்தால், கணவன் மனைவிக்குக்கு இடையில் நல்ல நெருக்கம் உண்டாகும் என நம்பப்படுகின்றது.
திருமண புகைப்படம்
வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் கருத்துப்படி திருமண புகைப்படத்தை படுக்கையறையில் மாட்டி வைப்பது கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மீதும் ஆரம்பத்தில் வைத்திருந்த காதலை அடிக்கடி நினைவூட்டுவதற்கு உதவுகின்றது.
இவ்வாறு செய்தால் திருமண வாழ்க்கை இறுதி வரையிலும் மகிழ்ச்சியும் காதலும் நிறைந்ததாக இருக்கும்.
ரொமாண்டிக் பொம்மைகள்
வாஸ்து பிரகாரம் படுக்கையறையில் ரொமாண்டிக் பொம்மைகளை வைத்திருப்பது கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் உறவை வலுப்படுத்துவதாக அமையும்.
இது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் காதலையம் அதிகரிக்க செய்வதுடன் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |