கலப்படம் இல்லாத கருப்பட்டியை எப்படி கண்டுபிடிப்பது? இனியும் ஏமாறாதீங்க
கருப்பட்டி ஒரிஜினலா அல்லது கலப்படமா என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கருப்பட்டி
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதனீரிலிருந்து கருப்பட்டி எடுக்கப்படுகின்றது. பதனீரை காய்ச்சுவதம் மூலம் கிடைக்கும் கருப்பட்டியை பனைவெல்லம், பானாட்டு, பனை அட்டு என்றும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலான கிராமங்களில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை தான் பயன்படுத்தி வருகின்றனர். கருப்பட்டியில் இரும்புச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கின்றது.
வயதிற்கு வந்த பெண் குழந்தைகளுக்கு ரத்த போக்கு அதிகமாக ஏற்படும் நிலையில், இதனை கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும், கர்ப்பப்பையை வலப்பெறவும் உதவுகின்றது.
சர்க்கரை நோயாளிகள் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தாமல், கருப்பட்டியை பயன்படுத்தி டீ, காபி குடித்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
உடலை சுறுசுறுப்பாக வைக்கும் மற்றும் சருமத்தை பளபளப்பாகவும் வைக்கின்றது. டீ காபி தவிர அல்வா, பணியாரம், களி, கூழ் என பலவிதமான ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.
கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது?
கருப்பட்டியை கடித்து சாப்பிடும் போது அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருந்தால் அது கலப்படம் இல்லாத கருப்பட்டி ஆகும்.
உடைத்துப் பார்த்தால் உள்பகுதி கருப்பு மற்றும் பழுப்பு கலந்த நிறத்தில் மங்களலாக இருக்குமாம். போலியானது என்றால் உட்புறமானது பளபளப்பாகவே இருக்கும்.
கருப்பாட்டியை வாங்கிவந்த பின்பு சில நாட்களில் அது உருக ஆரம்பித்தால் அவை போலி என்று அர்த்தம். அதுவே கல் மாதிரியாக இருந்தால் உண்மையானது என்று அர்த்தம்.
எப்படி பரிசோதனை செய்யலாம்?
கருப்பட்டி வாங்கி வந்த சில நாட்கள் ஆகிவிட்டால் மேலே புள்ளி புள்ளியாக தோன்றினால் அது நல்ல கருப்பட்டி ஆகும். ஏனெனில் பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால் இந்த புள்ளி தோன்றும். ஆனால் போலி கருப்பட்டியில் புள்ளிகள் தோன்றாது.
கிண்ணம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு கருப்பட்டியை சேர்க்கவும். அது கரைந்துவிட்டால் போலி என்றும் கரையவில்லை என்றால் ஒரிஜினல் என்றும் தெரிந்து கொள்ளலாம்.
கருப்பட்டியின் அடிப்பகுதியை தரையில் தட்டிப்பார்க்கும் போது மிதமான சத்தம் கேட்டால் ஒரிஜினல் என்றும் அதுவே சத்தம் அதிகமாக கேட்டால் அது போலி என்று அர்த்தம்.
கருப்பட்டியை கையில் எடுத்து பார்க்கும்போது அதில் பளபளப்பு ஏதும் இல்லாது இருந்தால் கலப்படமில்லை என்று அர்த்தம். அதுவே அதைத் தொட்ட பிறகு கையில் வெள்ளையாக ஒட்டிக்கொண்டால் அது போலியானது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |