சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி?
போலி அல்லது கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
சமையல் எண்ணெய்
பெரும்பாலும் நியாயமான எண்ணெய்களில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும். அதுவே பல்வேறு எண்ணெய்களின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் அது நிச்சயமாக கலப்படமாக இருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.
நீங்கள் வாங்கும் எண்ணெய் பாட்டில் சரியாக சீல் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
சீல் உடைந்து இருந்தாலோ அல்லது பாட்டில் மூடி டைட்டாக மூடி இல்லாமல் லூசாக இருந்தாலோ அதில் கலப்படம் ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயில் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே இதனால் மிகவும் மோசமான பக்க விளைவுகள் உண்டாகலாம். கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயில் தேங்காய் எண்ணெய் வாசம் வராது.
இதை வீட்டில் சில விஷயங்களை செய்தும் பரிசோதிக்க முடியும்.ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
தூய்மையான எண்ணெயாக இருந்தால் அது நிச்சயமாக கெட்டியாக மாறும். இதுவே கலப்படம் செய்யப்பட்ட எண்ணெயாக இருந்தால் அது திரவ வடிவத்திலேயே இருக்கும்.
கெட்டியாகும் போது இதற்கு 30 நிமிடங்கள் போதும். இப்படி சமையல் எண்ணெயை மிகவும் கவனமாக சோதித்து பார்த்து பயன்படுத்துவது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |