Vastu tips: அதிர்ஷ்ட தேவதையை தடுக்கும் ஷூ ரேக்- இப்போதே சரிசெய்ங்க
வழக்கமாக நீங்கள் செய்யும் வேலைகளில் ஏதாவது ஒரு தவறு நடந்து விட்டால் அது உங்கள் வீட்டின் வாஸ்துவில் அதிகமாக தாக்கம் செலுத்தும். ஆகையால் வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் வாஸ்துக்களை கடைப்பிடிப்பது அவசியம்.
நேர்மறையான ஆற்றல்கள் உங்களை சூழ்ந்து இருக்கும் பொழுது வருமானம், அதிஷ்டம், லாபம், பணவரவு, நற்செய்தி என நல்லதாகவே நடக்கும். அதே சமயம், எதிர்மறையான ஆற்றல்கள் நிறைந்திருக்கும் பொழுது தான் வாழ்க்கையை வெறுத்து போகும் அளவுக்கு பிரச்சினைகள் வருகின்றன.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வெளியில் செல்லும் பொழுது பயன்படுத்தப்படும் காலணிகள் கூட எதிர்மறையான ஆற்றல்களை வீட்டுக்குள் கொண்டு வருகிறது. அதற்கு சரியானதொரு இடம் கொடுக்காதவர்களுக்கு எதிர்மறையான ஆற்றல்களின் தாக்கம் கட்டாயம் இருக்கும்.
அந்த வகையில், எதிர்மறையான ஆற்றல்களை ஈர்க்கும் காலணிகளை வைக்கும் இடத்தில் என்னென்ன விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

இனி இந்த தவறை செய்யாதீர்கள்!
1. காலணிகள் வைக்கும் ரேக் பிரதான வாசலில் வைப்பது உங்களுக்கு பல அசுபமான பலன்களை கொண்டு வரும். நிதி முன்னேற்றம் காண விரும்புபவர்கள் இது போன்று வைக்காமல் உரிய இடத்தில் வைக்க வேண்டும். அதே போன்று சிலர் வீட்டிற்கு முன்னர் நிறைய செருப்புக்களை கழட்டி போட்டியிருப்பார்கள். அப்படி செய்யும் பொழுது அது கூட லட்சுமி தேவியை கோபப்பட வைக்கும்.
2. வாஸ்து சாஸ்த்திரங்களில், காலணிகளை கதவு ஓரங்களில் வைக்கக் கூடாது. ஏனெனின் பிரதான நுழைவாயில் லட்சுமி தேவியின் பாதையாகும். அது தடையாக வந்து விடும். காலணிகளை ரேக்குக்களை ஒரு ஓரமாக வைப்பது நல்லது.

3. காலணிகள் மற்றும் அலமாரிகளை எப்போதும் உங்களுடைய வீட்டின் மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைப்பது சிறந்தது. வெளிப்புறத்தில் இருந்து உங்களுடன் வரும் எதிர்மறையான ஆற்றல்கள் இந்த திசைகளில் வலுவிழந்து காணப்படும். இப்படி செய்தால் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வெற்றியில் எந்தவித குழப்பமும் இருக்காது.
4. திறந்த ஷூ ரேக்கை விட பயன்படுகிறீர்கள் என்றால் அது அசுபமாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் மூடிய நிலையில் உள்ள அலுமாரிகளை பயன்படுத்துவது நல்லது. மூடிய அலமாரி அசுத்த ஆற்றல்களையும் நாற்றங்களையும் கட்டுப்படுத்தி வீட்டிற்குள் நேர்மறையான ஆற்றல்களை நடமாடச் செய்யும். சுத்தமாகவும் மறைக்கப்பட்ட ஷூ அலமாரிகள் உங்களுடைய மன அமைதியை உறுதிச் செய்யும்.

5. பூஜை அறை, மாஸ்டர் படுக்கையறை மற்றும் சமையலறை ஆகிய இடங்களுக்கு பக்கத்தில் காலணிகளை ஒரு போதும் வைக்கக் கூடாது என வாஸ்து கூறுகிறது. உடல் ஆரோக்கியம், மன நிம்மதி, ஆன்மீகம் இப்படி வாழ்க்கை தேவையான இடங்களில் நாமே எதிர்மறையான ஆற்றல்களை கொண்டு சென்று வைப்பது அவ்வளவு நல்லதல்ல.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).