பணி நேரத்தில் தூக்க கலக்கமா? அப்போ உடனே இத தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக மதிய வேளை உணவு சாப்பிட்ட பின்னர் சிறிது தூக்கம் தூங்க வேண்டும் என்ற ஆசை நம்மிள் பலருக்கும் இருக்கும்.
வீட்டில் இருப்பவர்கள் இது சாத்தியம் என்றாலும் வேலையில் இருப்பவர்களுக்கு இது சாத்தியமாக அமையாது.
அலுவலகங்களில் எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாலும், மதியம் சிறிது நேர தூக்கம் இல்லாமல் சிலரால் தொடர்ந்து இயங்க முடியாது.
அந்த வகையில், அலுவலகப் பணியில் இருப்பவர்கள் மதியம் தூக்கம் வராமல் அவர்களை எப்படி கட்டுக்குள் வைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மதிய நேர தூக்கத்தை கட்டுபடுத்தும் வழிகள்
1. மாலை வேளைகளில் கப் டீ அல்லது காபி பருகினால் பிற்பகல் தூக்கம் காணாமல் போகும். இது வயிற்றுக்குள் சென்றவுடன் உடனடி உற்சாக உணர்வை தோற்றுவிக்கும். அதே சமயம் அதிகப்படியான காபீன் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி விடும் அபாயமும் உள்ளது.
2. தொடர்ச்சியாக வேலைச் செய்யும் ஒருவர் சில சமயங்களில் சோர்வடையலாம். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இடைவெளி எடுத்துக்கொள்வது அவசியம். இது அவர்களின் மனதை புத்துணர்ச்சியடையச் செய்யும்.
3. மதிய நேரம் தூக்கம் அதிகமாக தொந்தரவு படுத்தினால் உடனே அதிகமான காற்றோட்டம் இருக்கும் இடங்களுக்கு வந்து விடுங்கள். புதிய காற்று மற்றும் சூரிய ஒளி ஒருவரின் உடலை உற்சாகப்படுத்தும்.
4. மதியம் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது சோம்பலை குறைக்கும். அத்துடன் அதிகமான நேரம் தண்ணீர் குடிக்காத போது உடல் சோர்வு ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
5. மதிய வேளையில் தூக்கத்தை தடுப்பது கடினமாக இருப்பவர்கள் மாத்திரம் வாய்ப்பு இருந்தால் சுமாராக 10-15 நிமிடங்கள் கண்களை மூடி அறி துயில் ஓய்வு எடுக்கலாம். அதன் மூலம் புத்துணர்ச்சியும் உற்சாகமும் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |