காடுபோன்ற கூந்தல் வளர்ச்சி வேண்டுமா? கிளிசரினை இந்த தண்ணீரில் கலந்து பூசுங்க
நீண்ட முடி வளர்ச்சி அதுவும் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு எளிய வழிமுறை உள்ளது. இதற்கு கிளிசறின் மிகவும் உதவியாக இருக்கும்.

நீண்ட கூந்தல்
தற்போது தலைமுடி உதிர்வு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. தவறான வாழ்க்கை முறைகள் காரணமாக, அனைவரும் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
இருப்பினும், பல பெண்கள் இன்னமும் நீண்ட கூந்தலுக்காக பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதுபோன்ற பொருட்கள் ஒரு சில நாட்களுககு மட்டுமே நல்ல பலனை கொடுக்கும். அதன் பிறகு முடி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.
இதற்கு வீட்டில் இருக்கும் அரிசித்தண்ணீர் மிகவும் உதவும். இந்த அரிசித்தண்ணீரை கிளிசரினுடன் சேர்த்து பூசும் போது அது நல்ல பலனை கொடுக்கும் என்று கூறப்படுகின்றது.
மேலும் இது முடி வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது. அரிசி நீர், முடி நான்கு மடங்கு வரை வேகமாக வளர உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த இயற்கை முறை, முடியை வலுவாகவும், பளபளப்பாகவும், நீளமாகவும் மாற்றும். இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

அரிசி தண்ணீர்
அரிசி நீரில் வைட்டமின் பி மற்றும் ஈ, இனோசிட்டால், மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதற்கு உங்களுக்கு அரிசி நீர், கிளிசரின் மற்றும் வேப்ப இலைச் சாறு தேவைப்படும். இதைத் தயாரிக்க, 100 கிராம் அரிசியை சுமார் அரை லிட்டர் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் அரிசி அதன் தன்மையை இழக்காமல் இருப்பதற்காக, தண்ணீரை அரிசியுடன் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, தண்ணீரை வடிகட்டி தனியாகப் பிரிக்கவும்.

இப்போது இந்தத் தண்ணீரில் கிளிசரின் மற்றும் வேப்ப இலைச் சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது இது தலைக்கு பூச தயாராகி விடும். இதை தினமும் இரவு உறங்குவதற்கு முன் உங்கள் தலைமுடியில் ஸ்பிரே செய்து விட்டு
பின்னர், காலையில் மென்மையான ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவவும். இதன்படி செய்து வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியைக் கழுவ வேண்டும். இதை நீங்கள் தவறாமல் செய்தால், உங்கள் முடி வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |