ஒரே வாரத்தில் தொடைப்பகுதியில் இருக்கும் கருமையை போக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க!
பொதுவாகவே பெண்கள் தங்களின் முக அழகை பராமரிப்பதில் காட்டும் அக்கறையை அவர்களின் அந்தரங்க பாகங்களை பராமரிப்பதில் காட்டுவது கிடையாது.
அதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு அந்தரங்க உறுப்புகளை சுற்றிலும் அவர்களின் சரும நிறத்தை விட ஒன்றிரண்டு ஷெடுகள் அதிகரித்து சற்று கருமையாக காணப்படும்.
இது மாநிறத்தில் இருப்பவர்களுக்கு பெரிதாக விளங்காது. ஆனால் சற்று கலரான பெண்களுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கும்.
பொதுவாக தொடைகள் இரண்டும் உரசும் போது சரும உரசலால், அந்த இடத்தில் கருமை படர்வது வழக்கம். குறிப்பாக சற்று உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்கள் இந்த பிரச்சனைக்கு உள்ளாவார்கள். இந்த பிரச்சினை வயது பேதமின்றி எந்த வயதிலும் ஏற்படலாம்.
சரும நிறத்துக்கு ஏற்றாற் போல் தொடையின் நிறமும் இருக்க வேண்டுமானால் முறையான சரும பராமரிப்பு அவசியம். அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் கருமையை போக்க என்ன செய்யலாம் என்பது குறித்த சில வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருமையை போக்கும் வழிகள்
காற்றோட்டமில்லாத அந்தரங்க பகுதிகளுக்கு முறையான பராமரிப்பு அவசியம் இது அழகுக்காக வேண்டி மட்டுமல்லாது, ஆரோக்கியத்துக்காகவும் பராமரிக்க வேண்டும் என்பதே உண்மை.
தொடைப்பகுதிகளில் இருக்கும் கருமையை போக்க வேண்டுமானால், இறுக்கமான ஆடைகளை அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக பருமனான பெண்கள் ஜீன்ஸ் அணியும் போது காட்றோட்டம் அறவே இல்லாத காரணத்தினாலும் தொடை பகுதியில் அதிக உராய்வு ஏற்படுவதாலும் இந்த பிரச்சினை அதிகரிக்கும். எனவே இறுக்கமாக உள்ளாடைகள் மற்றும் ஜீன்ஸ் அணிவததை தவிர்த்து தளர்வான ஆடைகளை தெரிவு செய்யலாம்.
சிலர் இந்த கருமையை போக்க கனமாக பிரஷ் மற்றும் சோப்பு கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் இவ்வாறு செய்வதால், கருமை இன்னும் அதிகமாக தான் மாறும். செருமத்தை மென்மையான முறையில் மட்டுமே பராமரிக்க வேண்டும்.
தொடைப்பகுதியில் இருக்கும் கருமையை விரைவில் போக்க வேண்டும் என்றால், உள்ளாடைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து நன்றாக காயவைத்து அணிய வேண்டும்.
முடிந்தால், அயர்ன் செய்து அணிவது சிறப்பு. சிறிதளவு ஈரப்பதம் இருப்பதாலும் பாக்டீரியாக்கள் பெருக வாய்ப்பு காணப்படுகின்றது. இதுவும் தொடை பகுதி கருமையாக மாறுவதற்கும் அரிப்பு எரிச்சல் ஏற்படுவதற்கும் காரணமாக அமையலாம்.
ஈரப்பதம் காரணமாக அந்தரங்க உறுப்புகளில் பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
நீங்கள் ஒரு சரியான ஆன்டிபங்கல் பவுடரை இன்னும் பயன்படுத்வில்லை என்றால், அவசியம், உள்ளாடை அணியும் முன்னர் ஆன்டிபங்கல் பவுடரை பயன்படுத்த மறக்காதீர்கள்.அதனால் வியர்வை தங்குவது கட்டுப்படுத்தப்பட்டு, பாக்டீரியா மற்றும் பங்கஸ் வளர்ச்சி தடைப்படும்.
இரவில் தூங்கும் முன்னர் பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு கருமை உள்ள இடங்களில் நன்றாக மசாஜ் செய்து, பின்னர் ஒரு நல்ல மாய்சுரைஸர் அல்லது கற்றாழை ஜெல்லை அந்த இடத்தில் தடவினால் சருமத்தின் கருப்பு நிறம் மங்கும். ஒரே இரவில் சொரப்பு குறைவதையும் ஒரு வாரத்தில் கருமை நீங்குவதையும் கண்கூடாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
