பல்லி, கரப்பான் பூச்சி தொல்லைக்கு முடிவு கட்டணுமா? இதை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் போதும்
பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் இருக்கும் அழிக்க முடியாத தொல்லைகளில் ஒன்று தான் கரப்பான் பூச்சி மற்றும் பல்லி.
அதனை அழிக்க சந்தைகளில் ஏராளமான இரசாயனம் கலந்த மருந்து பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை வீடுகளில் பயன்படுத்துவது குழந்கைள் மற்றும் வயதானவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
அதிலும் குழந்தைகள் வீட்டில் இருந்தால், இத்தகைய மருந்துக்களை பயன்படுத்துவது பல்வேறு சமயங்கிளிலும் பாதக விளைவை ஏற்படுத்தும்.
வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி மற்றும் எறும்புகளின் தொல்லை அதிகரித்தால் அதிகம் செலவு செய்து மருந்துகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை எவ்வாறு இயற்கை முறையில் விரட்டியடிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
வினிகர் மற்றும் பேக்கிங் பவுடர்
ஒரு டம்ளரில் முழுமையாக வினிகரை எடுத்து அதில் இரண்டு மூன்று ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த கரைசலை தரையை மாப் வைத்து துடைக்கும்போது, தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை பயன்படுத்தி தரையை சுத்தம் செய்தால் அதன் வாசனை மற்றும் கார தன்மைக்கு எந்த பூச்சுகளும் வராது.
உப்பு மற்றும் எலுமிச்சை
தரையை துடைக்கும் போது தண்ணீரில் நான்கு அல்லது 5 தே.கரண்டி அளவுக்கு உப்பு சேர்த்து, அதில் இரண்டு எலுமிச்சைப் பழங்களின் சாற்றையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த தண்ணீரை கொண்டு வீட்டின் தரையை சுத்தம் செய்தால் வீட்டில் கரப்பான் பூச்சி, பல்லி மற்றும் எறும்புகளின் தொல்லை அரவே இருக்காது.
அது மட்டுமன்றி இது நோய் கிருமிகளையும் அழிக்கின்றது. மேலும் தரையை பளப்பளப்பாக வைத்துக்கொள்ளவும் துணைப்புரிகின்றது.
கற்பூரம் மற்றும் கிராம்பு
கற்பூரம் மற்றும் கிராம்பு சிறந்த இயற்கை கிரநாசினியாக செயற்படுகின்றது. ஒரு கப் தண்ணீரில் 5 முதல் 6 கற்பூரத்தை நன்றாகப் பொடி செய்து அதில் கிராம்பு எண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த கரைசலை தண்ணீரில் கலந்து தரையை சுத்ததம் செய்தால் அதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி, பல்லி உட்பட மழைக்காலத்தில் வரும் எந்த பூச்சிகளின் தொல்லையும் இருக்காது.
இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கும் தந்தைக்கு பேரதிர்ஷ்டம் கொடுப்பார்களாம்... உங்க திகதி என்ன?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |