இரவானால் கரப்பான் பூச்சி தொல்லையா? அப்போ இந்த ஸ்ப்ரே செய்து யூஸ் பண்ணுங்க..!
பொதுவாக வீடுகளில் கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இவ்வாறு இருக்கும் போது சாப்பாட்டு பொருட்கள், சாப்பாடு ஆகியவற்றை திறந்து வைக்கவே பயமாக இருக்கும்.
கரப்பான் பூச்சிகள் வீட்டில் இருந்தால் சிலர் சாப்பிடுவதற்கு கூட ஐயம் கொள்வார்கள். இந்த பூச்சிகளை கொள்வதுடன் முட்டைகளையும் அகற்ற வேண்டும்.
இந்த பூச்சிகள் அவைகளின் முட்டைகளை சமையலறை, குளியலறை, படுக்கையறை மேஜை என எங்கு வேண்டுமானாலும் பரப்பலாம்.
இதனை இரசாயன பொருட்கள் கொண்டு அகற்றுவது சில நேரங்களில் நமக்கும் சுகாதார குறைவை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் கரப்பான் பூச்சிகளை ஓட ஓட விரட்டும் டிப்ஸ்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கரப்பான் பூச்சிகளை விரட்டு ஸ்ப்ரே
தேவையான பொருட்கள்
- வெங்காயம் - 1
- பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் - - 1/2 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஸ்ரேபிவிற்கு தேவையான வெங்காயத்தை எடுத்து அதன் சாற்றை மாத்திரம் தனியாக எடுத்து கொள்ளவும். அந்த சாற்றுடன் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து விடவும்.
அதனுடன் பேக்கிங் பவுடர் கலந்து 1 நிமிடம் அப்படியே வைக்கவும். தண்ணீர் கலந்து அதனை ஒரு போத்தலில் ஊற்றி வைக்கவும்.
கரப்பான் பூச்சிகள் வரும் இடங்களில் அடித்து விடுங்கள். இதனை தொடர்ந்து செய்தால் கரப்பான் பூச்சி வாசம் கூட இல்லாமல் ஓடுவிடும்.
முக்கிய குறிப்பு
தேவையான நேரங்களில் மாத்திரம் தயாரித்து கொள்ளுங்கள். போத்தல்களில் சேமித்து வைப்பதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |