களவாணியாக வீட்டிற்குள் நுழையும் கரப்பான் பூச்சி இன்றோடு முடிவு.. ஒரே நாளில் விரட்யடிக்கும் கை மருந்து
பொதுவாக வீட்டில் சுற்றித்திரியும் கரப்பான் பூச்சிகள் வெப்பத்தை நாடிச் செல்பவைகள். இவற்றை குளிர்காலங்களில் சமையலறை பகுதிகளில் பார்க்கலாம்.
நோயை பரப்பும் முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று.
இவற்றை அழிப்பதற்கு உயிர்கொல்லி மருந்துகள் நிறைய இருந்தாலும் கரப்பான் பூச்சிகளுக்கு அழற்சியை ஏற்படுத்தி வரவிடாமல் கட்டுபடுத்தலாம்.
அந்த வகையில், கரப்பான் பூச்சிகளை இயற்கையான முறையில் விரட்டியடிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.
1. பேக்கிங் சோடா + சர்க்கரை
எத்தனை கரப்பான் பூச்சி மருந்துகள் இருந்தாலும் கரப்பான் பூச்சியை விரட்டியடிக்கும் இயற்கை மருந்து பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை கலவை தான். இரவு வேளைகளில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை இரண்டையும் கலந்து கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவி விடவும். பேக்கிங் சோடாவில் இருக்கும் அமிலத்தன்மை கரப்பான் பூச்சியை கொல்ல செய்கிறது. இதனால் கரப்பான் பூச்சி வரவு கட்டுபடுத்தப்படுகிறது.
2. போரிக் அமிலம்
கடைகளில் வாங்கும் மருந்தை விட போரிக் அமிலம் சிறப்பாக செயற்படுகின்றது. கரப்பான் பூச்சிகள் வீட்டிற்குள் வரும் வழிகளை கண்டுபிடித்து அந்த இடங்களில் இதை தெளித்து விட்டால் கரப்பான் பூச்சி வருவது கட்டுபடுத்தப்படும். இந்த அமிலத்தை தெளிக்கும் பொழுது குழந்தைகள் பெரியவர்கள் விடயத்தில் அதிக எச்சரிக்கை தேவை.
3. டீ ட்ரீ ஆயில்
கரப்பான் பூச்சிகள் போன்று மற்ற பூச்சிகளையும் விரட்டுவதில் டீ ட்ரீ ஆயில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. கரப்பான் பூச்சி வரும் இடங்களுக்கு டீ ட்ரீ ஆயிலை தெளிக்கலாம். இதில் நச்சுத்தன்மை இல்லை. இதனால் பாதிப்பு குறைவாக இருக்கும்.
தேயிலை மர எண்ணெய் - கால் கப், தண்ணீர் - 2 கப் இந்த அடிப்படையில் கலந்து தெளித்தால் சிறந்த பலனை பெறலாம். இதிலிருக்கும் வாசணை கரப்பான் பூச்சிகளை உள்ளே வரவிடாமல் தடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |