Cellulite Remedy: இடுப்பு, தொடை பகுதிகளில் உள்ள கொழுப்பை குறைக்க வீட்டு வைத்தியம்
செல்லுலைட் என்பது மங்கலான தோலை குறிக்கும் நிலை. இது நீர், கொழுப்பு நச்சுக்களின் கலவையால் உண்டாகிறது.
ஆண்களை விட பெண்களுக்கு அதிக சதவீதம் கொழுப்பு உள்ளது. கெட்டியான கொழுப்பு திசுக்கள் ஆங்காங்கே தேங்கியிருக்கும்.
குறிப்பாக தொடை மற்றும் பிட்டம் பகுதிகளில் காணப்படும் இவை மங்கலான நிறத்தை தருகிறது.
இது உடல் பருமனாக இருக்கும் பெண்களில் மட்டும் அல்லாமல் சில நேரங்களில் மெலிதான பெண்களிடமும் காணப்படுகிறது.
இந்த கெட்டியான கொழுப்பு திசுக்களை கரைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மசாஜ்
மசாஜ் செய்வதன் மூலம் கொழுப்பு நிறைந்த தோல் திசுக்களை கரைக்க உதவும். இது செல்லுலைட் அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும்.
இது கழிவுப்பொருள்களை திசுக்களில் இருந்து வெளியேற்றி மீண்டும் இரத்த ஓட்டத்தில் கொண்டு செல்கிறது. கொழுப்பு தேங்கிய இடத்தில மசாஜ் செய்வதற்கு எண்ணெய் மற்றும் கிரீம்களை பயன்படுத்தலாம்.
ட்ரை பிரஷ்
ட்ரை பிரஷ் பயன்படுத்துவதால் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் நிணநீர் வடிகால் துண்டுகிறது. இதனால் செல்லுலைட் குறைக்கிறது.
ஒரு நாளைக்கு 2 -5 நிமிடங்கள் வரை செய்யலாம். இந்த உலர் பிரஷ் பயன்படுத்தும் போது சருமமும், பிரஷ்ஷும் உலர்வாக இருக்க வேண்டும்.
காபி ஸ்க்ரப்
காஃபி ஸ்க்ரப் அதிகப்படியான செல்லுலைட் இருக்கும் பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது.
ஸ்க்ரப்பிங் மற்றும் மசாஜ் செய்வதன் மூலம் செல்லுலைட்டுக்கு பொறுப்பான தளர்வான சருமத்தை இறுக்க உதவும். மேலும், தளர்வான சருமத்தை இறுக்க உதவும்.
தண்ணீர்
உடலில் உள்ள செல்லுலைட் குறைக்க நீர் சிறந்த வழியாகும். இது உடலின் பல்வேறு பகுதிகளில் செல்லுலைட் உருவாவதை கட்டுப்படுத்துகிறது.
செல்லுலைட்டில் இருக்கும் நச்சுக்கள் அதிக தண்ணீர் குடிக்கும் போது வெளியேறுகிறது.
மாய்சுரைசர்
சருமத்தை தினமும் மாய்சுரைசர் செய்வதால் சருமத்தை மென்மையாக பொலிவாக வைத்திருக்க செய்யும். மேலும், செல்லுலைட் அகற்றவும் செய்யும்.
தேங்காய் எண்ணெயை மாய்சுரைசராக பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்காது. இது தளர்வான சருமத்தை இறுக்கி உடலில் உள்ள செல்லுலைட் உள்ளடக்கத்தை குறைக்கும்.
ஒமேகா 3 உணவுகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் செல்லுலைட்டின் அளவை குறைக்க உதவுகின்றன. சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கிறது.
ஒமேகா 3 நிறைந்த சால்மன் உணவுகளை சாப்பிடுவது செல்லுலைட் இல்லாத உடலை பராமரிக்க உதவும்.
ஹார்மோன் சமநிலை
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உடலில் செல்லுலைட் உருவாவதற்கு வழிவகுக்கும்.
உடலில் செல்லுலைட் இருப்பை குறைப்பதில் நிலையான ஹார்மோன்கள் முக்கியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |