வீட்டுல ஈ, எறும்பு தொந்தரவு அதிகரித்து விட்டதா? அப்போ இதுல மருந்து செய்து போடுங்க
பருவ கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது வீட்டில் எறும்புகள், ஈக்கள் மற்றும் கரப்பான் பூச்சி வர ஆரம்பித்து விடும். இவை வீட்டிலுள்ள அழுக்குகள் மற்றும் உணவுப் பொருட்கள் மீது அதிகமான கவனம் கொண்டு, அதன் பக்கத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.
இவை உணவை சாப்பிட்டாலும் பரவாயில்லை. மாறாக நாம் சாப்பிட முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக மனிதர்களுக்கு நோய் நிலமையையும் ஏற்படுத்தும்.
இதனால் எப்போதும் நாம் வாழும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். வீட்டின் தூய்மை எறும்புகள், ஈக்கள் வருவதற்கு இடம் கொடுக்காது.
அந்த வகையில், வீடு எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் பூச்சிகளின் தொல்லை அதிகமாகி விட்டது என்றால் ஒரு சில பொருட்களை போட்டு வீட்டிலேயே மருந்து செய்யலாம். அப்படியாயின், பூச்சிக் கொல்லிகளை எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பூச்சிக் கொல்லி தயாரிப்பது எப்படி?
1. வீட்டில் எறும்புகள் இருக்கும் இடத்தில் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு இரண்டையும் கலந்து கொண்டு தெளிக்கவும். எலுமிச்சையில் உள்ள அமிலம் எறும்புகளை விரட்டியடிக்கும்.
2. வினிகர் மற்றும் தண்ணீர் இரண்டையும் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, பூச்சிகள் இருக்கும் இடங்களில் தெளிக்கவும். இப்படி செய்தால் பூச்சிகள் அந்த இடத்தில் இருந்து ஓடி விடும்.
3. கிராம்பு மற்றும் பிரியாணி இலையில் இருந்து வரும் கடுமையான வாசனை எறும்புகள், ஈக்களை விரட்டியடிக்கும். எனவே இவற்றை சமையலறை, உணவு வைக்கும் இடத்தில் வைக்கவும்.
4. வீட்டின் ஈரப்பதம், இருள் காரணமாக எறும்புகள், ஈக்கள் வர வாய்ப்பு உள்ளது. சூரிய ஒளி சுத்தமான காற்று வீட்டிற்குள் வரும் வகையில் வீட்டின் கதவை சிறிது நேரம் திறந்து வைத்தால் பூச்சிகளின் தொல்லை இருக்காது.
5. வீட்டில் குப்பைகளை திறந்து வைத்தால் ஈக்கள் பெருகும். இதனால் குப்பைகளை அடிக்கடி அகற்றி விடுங்கள். உணவுப் பொருட்கள் வெளியில் இருந்தால் அதனை மூடி போட்டு பாதுகாப்பாக வைக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |