சாணக்கிய நீதி: சமூகத்தில் உங்க மதிப்பு உயரணுமா? இந்த விடயங்களை அவசியம் கடைப்பிடிங்க
முன்னைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
தற்காலத்திலும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவலின் பிரகாரம் சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயர வேண்டும் என்றால் அவசியம் பின்பற்ற வேண்டிய விடங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்கள் மதிப்பை உயர்த்தும் பழக்கங்கள்
சாணக்கிய நிதியின் பிரகாரம் தவறான நண்பர்களிடமிருந்து விலகி இருப்பதால், உங்களின் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் தனாகவே உயர ஆரம்பிக்கும்.
காரணம் நமது வாழ்க்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதில் நாம் தெரிவு செய்யும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒழுக்கமான நண்பர்கள் உங்கள் வாழ்க்கை சரியான பாதைக்கு கொண்டு செல்வார்கள்.
சாணக்கியரின் கூற்றுப்படி உங்களின் பேச்சு இனிமையானவும் அறிவு பூர்வமானதாகவும் இருந்தால், சமூகத்தில் அனைவரும் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார்கள்.
ஒருவர் எப்போதும் தனது பேச்சில் எளிமையையும் பணிவையும் கொண்டிருப்பது அவரின் தரத்தை மற்றவர்கள் மத்தியில் உயர்த்தும்
தனது தவறுகிளல் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அதே தவறை மீண்டும் எந்த சூழ்நிலையிலும் செய்யாதிருக்கும் மனிதனின் மரியாதை மற்றவர்கள் மத்தியில் விரைவில் உயரும். என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
மேலும் எந்த நபர தனது தவறு மட்டுமின்றி மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கின்றாறோ, அவர் சமூகத்தில் மரியாதைக்குரியவராக மாறுகின்றார்.
மற்றவர்களுக்கு பண ரீதியாகவோ அறிவை பகிர்வதன் மூலமாகவே உதவும் நபர்கள் எப்போதும் சமூகத்தில் மற்றவர்களின் மரியாதைக்கு உரித்தானவர்கள் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
எல்லா காலங்களிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டே இருப்பவருக்கு எந்த இடத்திலும் மதிப்பும் மரியாதையும் ஒருபோதும் குறைவதே கிடையாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |