சாணக்கிய நீதி: சமூகத்தில் உங்க அந்தஸ்து உயரணுமா? அப்போ இந்த குணங்கள் அவசியம்
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
அவரின் கொள்கைகளை தொகுத்து உருவாக்கப்பட்ட சாணக்கிய நீதிக்கு தொன்று தொட்டு இன்றளவும் மவுசு குறையவே இல்லை.
இந்த நீதி நூலில் மனித வாழ்க்கையில் நாம் நிச்சயம் கடக்க வேண்டிய கட்டங்கள் தொடர்பில் முழுமையான மற்றும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தையும் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்தது.
சாணக்கிய நீதியின் பிரகாரம் குறிப்பிட்ட சில குணங்களை கொண்டிருப்பவர்களின் அந்தஸ்து சமூகத்தில் தானாகவே உயர ஆரம்பிக்கும். அப்படிப்பட உன்னத குங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சமூகத்தில் மதிப்பை உயர்த்தும் குணங்கள்
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பணிவு மற்றும் ஒழுக்கம் மற்றவர்களின் மரியாதையைப் பெற்றுக்கொள்வதற்கு இன்றியமையாதது.
ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், எவ்வளவு அதிகாரம் மிக்க பதவியில் இருந்தாலும் அவரிடம் இயல்பாகவே இருக்கும் பணிவும் எளிமையுமே மற்றவர்களின் மனங்களில் ஒருவருடைய மதிப்பபை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
மரியாதை பெறுவதற்கு சுய ஒழுக்கத்தை ஒரு திறவுகோலாகவும் அவர் பார்க்கிறார். சாணக்கிய நீதி மூலம், சுயக்கட்டுப்பாடு தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சமூகத்தில் அந்தஸ்தையும் மதிப்பையும் பெறுவதற்கும் மிக முக்கியமானது என்று சாணக்கியர் கூறுகிறார்.
தங்களின் ஆசைகளை கட்டுப்படுத்திக்கொள்ளும் குணம் மற்றும் எந்த சூழ்நிலையிலும் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் குணம் கொண்டவர்களிடம் பணம் பெரியளவில் இல்லாம போதும் சமூகத்தில் இவர்களுக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் குறைவதே கிடையாது.
தனது சொந்த சாதனைகளைப் பற்றி தற்பெருமை பேசாதவர்களை மற்றவர்கள் எப்போதும் மனதளவில் மதிக்கின்றார்கள் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது. நமது வாழ்க்கையில் எந்தளவுக்கு நிதி ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் வளர்ச்சி காணக்கின்றோமோ, அந்தளவுக்கு பணிவு இருக்க வேண்டும்.
சுய ஒழுக்கம், தற்பெருமை பேசாத குணம் மற்றும் பணிவு யாரிடம் இருக்கின்றதோ இவர்களின் அந்தஸ்து சமூகத்தில் தானாகவே உயரும் என்று சாணக்கியர் உறுதியாக குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |