பெருங்காயத்தில் கலப்படம்! பாதிப்பை ஏற்படுத்துமா? மருத்துவ நிபுணர் அருண் குமார் விளக்கம்
இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான நறுமணப் பொருட்களில் ஒன்றான பெருங்காயத்தின் தரம் மற்றும் அதில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் கலப்படம் தொடர்பில் சமீப காலங்களில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.
குறிப்பாக, சந்தையில் விற்பனை செய்யப்படும் பெருங்காயத்தின் உண்மையான தரம், அதன் தயாரிப்பு முறைகள், அதில் வேறு பொருட்கள் கலக்கப்படுகிறதா என்பதுடன், அவ்வாறான கலப்படம் மனித உடல்நலத்திற்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் நுகர்வோர் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பெருங்காயத்தின் தரம், அதில் ஏற்படக்கூடிய கலப்படம் மற்றும் அதனைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய உடல்நலத் தாக்கங்கள் தொடர்பாக மருத்துவ நிபுணர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவ நிபுணரின் விளக்கம்
நுகர்வோர் பெருங்காயத்தை வாங்கும்போது அதன் தரம், தயாரிப்பு மற்றும் பொதியிடல் தொடர்பான தகவல்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான அல்லது தரம் குறித்து உறுதிப்படுத்த முடியாத பொருட்களைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பெருங்காயத்தின் தரம் தொடர்பான சந்தேகங்கள் எழும்போது, அதனை வெறுமனே சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களின் அடிப்படையில் தீர்மானிக்காமல், உரிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் மருத்துவ அல்லது உணவு பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பெருங்காயங்கள் தூய வடிவில் இருப்பதில்லை. விலையைக் குறைப்பதற்காகவும், அளவை அதிகரிப்பதற்காகவும் தூய பெருங்காயப் பசையுடன் (Pure resin) மைதா, கோதுமை மாவு அல்லது அரிசி மாவு போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் கலகக்கப்டுகின்றது.
பெருங்காயத்தின் தரம் மற்றும் கலப்படம் தொடர்பாக பேசுகையில், ஒரிஜினல் பெருங்காயம் வலுவான மற்றும் கடுமையான மணம் கொண்டதாக இருக்கும். எனவே இதனை அப்படியே பயன்படுத்த முடியாது என்பதால் தான் இவ்வாறு சில பொருட்கள் கலப்படும்.
ஆனால் சில பிரபல நிறுவனங்கள் பெருங்காயத்தின் ப்ளேவரை மாத்திரம் பயன்படுத்தி வெறுமனே மைதா, கோதுமை மாவு அல்லது அரிசி மாவு போன்றவை பெருங்காயம் என விற்பனை செய்துள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, தூய பெருங்காயம் மற்றும் “Compounded Hing” எனப்படும் கலவைப் பெருங்காயத்துக்கு தனித்தனி தரநிலைகளை வகுத்துள்ளதால் சில பிரபல நிறுவனங்களின் பெருங்காயத்தினை தடை செய்துள்ளது.
அதனை வாங்கி பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதுடன், இவ்வாறான கலப்படம் நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கத்துக்காக செய்தவை இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் அருண்குமார் வலியுறுத்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |