சார்ஜ் ஏறவில்லையா? அப்போ இந்த தவறை அடிக்கடி பண்ணுறீங்க
பொதுவாக தற்போது இருக்கும் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோம்.
வீட்டில் நாம் சாப்பாடு இல்லாமல் கூட இருப்போம் ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க மாட்டோம். அந்தளவு தொழிநுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.
ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் போது நாம் விடும் சிறு தவறுகள் கூட அந்த செல்போனை இழக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது.
இதனால் தான் செல்போனை வாங்கிய பின்னர் அது குறித்து பூரண விளக்கத்தை கடைக்காரரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என கூறுவார்கள்.
அந்த வகையில் ஸ்மார்ட் போன் சார்ஜ் இழந்த பின்னர் அதற்கு சார்ஜ் போடுவோம், ஆனால் அந்த நேரத்தில் கூட நம்மால் பொறுமையாக இருக்க முடியாது.
இவ்வாறு அடிக்கடி பயன்படுத்தினால் சார்ஜ் ஏறுவதில் பிரச்சினை ஏற்படும். இந்த காரணம் தெரியாமல் நாம் செல்போனில் தான் பிரச்சினை என அதனை மாற்றுவோம்.
மாறாக அப்படி என்ன தான் தவறு விடுகிறோம் என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
தவறுகள்
1. சுவிட்ச் ஆப் செய்யாமல் சார்ஜ் போடுதல்
சார்ஜ் 30 சதவீதத்திற்கு வந்த பின்னர் போனை ஆப் செய்து விட்டு சுவிட்சை ஒன் செய்ய வேண்டும்.
காரணம் போன் ஒன்னில் இருக்கும் போது நோட்டிபிகேஷன் மெசேஜ் மற்றும் கோல் வந்து கொண்டே இருக்கும். இதனால் சார்ஜ் சரியாக ஏறாமல் போய் விடும்.
2. நெட்டை ஓன் செய்து விட்டு சார்ஜ் போடுதல்
ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யும் போது அதனை சரியாக சார்ஜ் ஏறவிடாமல் தடுக்கிறது. இதனால் Aeroplane Modeல் போட்டு சார்ஜ் செய்ய வேண்டும்.
3. மற்றைய போன்களின் சார்ஜர் பயன்பாடு
வேறோரு போன்களிலுள்ள சார்ஜர்களை நமது போனுக்கு செட்டாகுகின்றது என நினைத்து பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு பயன்படுத்துவதால் நமது போன்களில் இருக்கும் பின் லேசாகி விடுகிறது.