ஐக்கிய அமீரகம்! டூரிஸ்ட் விசாவை புதுப்பிப்பது எப்படி?
வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் எந்த ஒரு நபரும் கண்டிப்பாக விசா, பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
அதிலும், துபாய்க்கு வர விரும்பும் வெளிநாட்டினர்கள் அதற்கான விசாவையும் வைத்திருக்க வேண்டும். விசா காலாவதியாவதற்கு 3 அல்லது 5 நாட்களுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
எனவே விசாவை நீட்டிக்க மாற்ற 30 அல்லது 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். ஆனால், 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்கள் துபாயில் நுழைவதற்கு முன்னதாகவே விசா பெற வேண்டிய தேவையில்லை.
இதில், இந்திய குடிமக்களை பொறுத்தவரை, சில இந்திய குடிமக்கள் வருகையின் போது விசாவிற்கும் தகுதி பெறலாம். சாதாரண பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் சில குறிப்பிட்ட இந்திய குடிமக்கள் இதில் அடங்கும்.
* USA வழங்கிய விசிட் விசா வைத்திருப்பவர்கள்
* அமெரிக்காவால் வழங்கப்பட்ட கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள்
* UK வழங்கிய குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள்
* ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள்.
இதுபோன்ற சமயத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்த நாளிலிருந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு விசா அல்லது கிரீன் கார்டு செல்லுபடியாகும்.
அதிகபட்சமாக 14 நாட்கள் தங்குவதற்கு நீங்கள் விசா ஆன் அரைவல் பெறலாம். ஒரு வேளை நீங்கள் வருகையின் போது விசாவிற்கு தகுதி பெறவில்லை என்றால், கீழ்கண்ட வகையில் விசா பெறலாம்.

சுற்றுலா விசா
சுற்றுலா விசாக்கள் பொதுவாக சுற்றி பார்க்க உங்கள் திட்டத்தை பொறுத்து வழங்கப்படும்.
அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுலா விசாக்கள் 30 நாட்கள் அல்லது 90 நாட்கள் காலத்திற்கு வழங்கப்படும். இதற்கு சிங்கிள் எண்ட்ரி அல்லது பல எண்ட்ரிகளை அனுமதிக்கலாம்.
யார் மூலம் விண்ணப்பிக்கலாம்?
ஹோட்டல் மற்றும் ஏஜென்சிகள் UAE இல் உள்ள உரிமம் பெற்ற பயண முகவர்கள் மற்றும் ஹோட்டல்கள் உங்களுக்காக ஒரு சுற்றுலா விசாவை ஏற்பாடு செய்யலாம்.
எனவே நீங்கள் அவர்கள் மூலம் டிக்கெட் வாங்கினால் மற்றும் குறிப்பிட்ட ஹோட்டலில் ஹோட்டல் முன்பதிவு செய்திருந்தால் அவர்கள் விசா பெற ஏற்பாடு செய்யலாம். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

binayah
தேவையான ஆவணங்கள்
* பாஸ்போர்ட் நகல் (6மாதம் செல்லும்)
* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
* பழைய விசா சுற்றுலா/ரத்துசெய்யப்பட்ட விசா நகல்
விசா ஆன் அரைவல் வசதியின் கீழ் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைந்திருந்தால், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் மட்டுமே தேவைப்படும்.
இதை உறவினர் அல்லது நண்பர் மூலம் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால், அவர்கள் தங்களுடைய வசிப்பிட விசா பக்கத்தின் நகலையும் UID எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.