இன்ஸ்டாகிராமில் Quiet Modeஐ Enable செய்வது எப்படி?
உலகின் முக்கியமான சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான மெட்டா நிறுவனத்தின் instagram செயலியில் Quiet Mode அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இந்த வசதி இன்ஸ்டாவில் காணப்படவில்லை. Quiet Mode தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இன்ஸ்டா பயனர் எவ்வித புஷ் நோட்டிபிகேஷன்களையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.
பயனர்களின் இன்ஸ்ட்டா பயன்பாட்டை வரையறுக்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இது அனைத்து நோட்டிபிகேஷன்களையும் மியுட் செய்யும் வகையிலானது அல்ல.
இந்த வசதி பல்வேறு அம்சங்களை கொண்ட அமைந்துள்ளது. உதாரணமாக பயனருக்கு பிரிதொரு பயனரினால் அனுப்பி வைக்கப்படும் தகவல் கிடைக்கப் பெறவில்லை என தகவல் அனுப்பினருக்கு அறியப்படுத்தும் அம்சம் இதில் காணப்படுகிறது.
Quiet Mode ஐகான் ப்ரொபைலில் காணப்படுவதனால் ஏனைய பயனர்கள் குறித்த இன்ஸ்டா பயனர் க்வாய்ட் மோடில் இருக்கின்றார் என்பதை இலகுவில் அறிந்து கொள்ள முடிகிறது.
இன்ஸ்டா பயன்பாட்டில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்ள விரும்பினாலோ அல்லது அதன் பயன்பாட்டை வரையறுத்துக் கொள்ள விரும்பினாலோ நீங்கள் Enable Quiet Mode என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.
insta வில் மோடை எவ்வாறு எனேபிள் செய்வது?
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோர் ஊடாக உங்களது ஸ்மார்ட் போனில் லேட்டஸ்ட் இன்ஸ்டால் வெர்ஷனை டவுன்லோட் செய்து உள்ளீர்களா, என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
இந்த க்வாய்ட் மோட் வசதி இந்தியாவில் இன்னமும் அறிமுகம் செய்யப்படவில்லை எனினும் தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியர்கள் இந்த வசதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
செட்டிங்சை தேர்வு செய்து நோட்டிபிகேஷன் ஐ தேர்வு செய்து க்வாய்ட் மோடை தேர்வு செய்வதன் ஊடாக இந்த வசதியை இணையதளம் செய்து கொள்ள முடியும்.
(Choose Settings → Notifications → Quiet mode)