இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? ஈசியான வழி இதோ
இன்று பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்ஸ்டாகிராம்
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பணம் சம்பாதிப்பதற்கு மக்கள் எளிதில் சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆம் யூடியூப், டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என பல செயலிகள் இருக்கின்றது. அதிலும் இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சம் வந்ததிலிருந்து மிகவும் பிரபலமாகிவிட்டது. இப்போது, இன்ஸ்டா பயனர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்டவர்கள் நிறைய சம்பாதிக்க முடியும்.
எவ்வாறு சம்பாதிக்கலாம்?
பிராண்ட் பார்ட்னர்ஷிப் மூலம் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகளை வெளியிடுவதன் பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வருமானம் பெறுகின்றனர்.
அஃபிலியேட் பார்ட்னர்ஷிப் முறையில் லிங்க், தள்ளுபடி கூப்பன் போன்றவற்றைப் பகிர்வதன் மூலம் இன்ஸ்டா கிரியேட்டர்களுக்கு கமிஷன் தொகை கிடைக்கும். அஃபிலியேட் மார்க்கெட்டிங் நெட்வொர்க்குகள் மூலமாகவோ அல்லது பிராண்டிலிருந்து நேரடியாகவோ, 5-30% வரை கமிஷன் கிடைக்கும்.
மேலும் இன்ஸ்டாகிராம் தனது போனஸ் திட்டத்தின் மூலமாக பிரபலங்கள் போடும் பதிவுகளுக்கு வெகுமதி கிடைப்பதுடன், இவை நேரடியாக பணம் சம்பாதிப்பதற்கான வழியாகும். ஆனால், இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் பிசினஸ் மற்றும் கிரியேட்டர் கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.
பிராண்டுகளை வைத்து இயல்பான முறையில் விளம்பர பதிவுகளை உருவாக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டாலும், பிராண்ட் கிரியேட்டர்கள் இதற்கான பணத்தினை கொடுக்கின்றனர்.
நமது சூழ்நிலையினைக் தனது ரசிகர்கள், ஃபாலோயர்களிடமிருந்து நன்கொடையாக பணம் மற்றும் பரிசுகளை பெற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |