வெறும் 10 ரூபாய் செலவில் வீட்டிலே waxing கிரப் செய்யலாம்- எப்படின்னு தெரியுமா?
Skin Care
Beauty
By DHUSHI
waxing என்பது உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் செயன்முறையாகும்.
முடிகளை அகற்றுவதற்கு பல தொழில்நுட்பமுறைகள் இருந்தாலும் வளர்ச்சியை எப்போதும் தடுக்க முடியாது.
waxing செய்வதற்காக பெண்கள் பெரும்பாலான பியூட்டி பார்லருக்கு செல்வார்கள். அவர்கள் இதற்காக அதிக பணம் செலவிடுவார்கள்.
மாறாக waxing செய்யும் போது பியூட்டி பார்லருக்கு செல்லாமல் வெறும் 10 ரூபாய் செலவில் வீட்டிலே செய்யலாம்.
அந்த வகையில், வெறும் 10 ரூபாயை வைத்து வீட்டிலேயே எப்படி waxing கிரப் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரை- 2 கப்
- எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 டீஸ்பூன்
- உப்பு- 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை
- முதலில் அடுப்பில் ஒரு அகலமான வாணலியை வைத்து அதில் சர்க்கரை, எலுமிச்சை சாறு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
- கரண்டியை வைத்து மெதுவாக கலந்து விட்டு கொண்டே இருக்கவும். இல்லாவிட்டால் சர்க்கரை கட்டியாகி விடும்.
- சரியாக சர்க்கரை கரைந்து தேன் பதத்திற்கு வரும் வரை கலந்து விடவும்.
- தேன் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஒரு கிண்ணத்திற்கு கலவையை மாற்றிக் கொள்ளவும்.
- இந்த முறையை சரியாக செய்தால் வேக்ஸ் கலவை தயார்.!
பயன்படுத்தும் முறை
- waxing செய்யும் முன்னர் கை அல்லது கால்களில் பவுடர் போட்டுக்கொள்ளவும்.
- பின்னர் வேக்ஸிங் செய்ய பயன்படுத்தப்படும் கத்தி அல்லது ஐஸ்கிரீம் ஸ்டிக் வைத்து வேக்ஸை முடிகள் உள்ள இடங்களில் தடவவும்.
- கலவையை தடவிய பின்னர் சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிடித்து இழுத்தால் அந்த இடத்திலுள்ள அனைத்து முடிகளும் கையோடு வந்து விடும்.
- வேக்ஸிங் செய்த பின்னர் கை, கால்களுக்கு மாய்ஸ்சரைசர் கிரீம் தடவி லேசாக மசாஜ் செய்யவும்.
- இறுக்கமான ஆடைகளை அணிவதை முற்றிலும் தவிர்க்கவும் அத்துடன் வெயிலில் வெளியில் செல்வதையும் தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US