தலைமுடிக்கு 5 ஆயிரம் கொடுத்து கெரட்டீன் சிகிச்சையா செய்பவரா? பக்கவிளைவு இல்லாமல் சும்மாவே வீட்டில் செய்யலாம்!
கெரட்டீன் சிகிச்சைக்கு குறைந்தது 5000 ரூபாய் செலவாகும்.
கெரட்டீன் என்பது ஒருவகையான புரதம். இது தலைமுடியை வலுவாக்கும். தலைமுடி உதிர்வதை முற்றிலும் நிறுத்தும்.
ஆனால் தலைமுடிக்கு இது தற்காலிகமாக சில மாதங்களுக்கு மட்டுமே பொலிவைக் கொடுக்கும். இந்த கெரட்டீன் சிகிச்சை பெரும்பாலும் பார்லரில் தான் செய்யப்படுகிறது.
இதில் சில க்ரீம்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் கண் எரிச்சல், தலைமுடி வேர்க்கால்களில் அழற்சி போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
பக்க விளைவுகள் இல்லாமல் கண்டிப்பாக வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்து மிக எளிமையாக செலவே இல்லாமல் கெரட்டீன் சிகிச்சை செய்து கொள்ள முடியும்.
அது எப்படி என்று பார்க்கலாம்.

அரிசி சாதம் - தேங்காய்ப்பால்
தேவையான பொருள்கள்
- தேங்காய்ப்பால் - கால் கப்
- தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
- அரிசி சாதம் - 4 ஸ்பூன்
- முட்டையின் வெள்ளைக்கரு - 1
பயன்படுத்தும் முறை
முதலில் தேங்காய்ப்பாலில் தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலக்குங்கள்.
நன்கு அடித்து எடுத்தால் அது பேஸ்ட் போல வரும். அதனுடன் அரிசி சாதத்தைச் சேர்த்து நன்கு பிளண்டரில் போட்டு பேஸ்ட்டாக்கி தலையில் பிரஷ் கொண்டு அப்ளை செய்யுங்கள்.
45 நிமிடங்கள் அப்படியே உலர விட்டுவிட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள்.
குறிப்பு - இந்த சிகிச்சை செய்து கொண்ட பின் அடுத்த மூன்று நாட்களுக்குத் தலைக்கு ஷாம்பு பயன்படுத்தக்கூடாது.