ஸ்மார்ட்போனில் அடிக்கடி Storage Full என்ற பிரச்சனையா? இதை மட்டும் செய்திடுங்க பாஸ்
உங்களது ஸ்மார்ட்போனில் அடிக்கடி ஸ்டோரேஸ் ஃபுல் என்று மெசேஜ் வருவதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் ஒவ்வொரு மக்களுக்கும் மூன்றாவது கையாக இருப்பது செல்போன் ஆகும். ஆம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அருகில் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கின்றது.
ஸ்மார்ட் போன் இதற்கு மட்டுமின்றி பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்றனர்.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவும், புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஸ்மார்ட்போன்கள் அதிகமாகவே பயன்பாட்டில் இருக்கின்றது.
ஆனால் இவற்றில் ஸ்டோரேஜ் ஸ்பேஸை காலி செய்து ஸ்டோரேஜ் ஃபுல் என்று காட்டி விடுகின்றது. இந்த பிரச்சனையை சமாளிக்க நாம் என்ன செய்யலாம் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
Storage பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம்?
உங்களது போனில் பயன்படுத்தப்படாத ஆப் இருந்தால் அதனை உடனே டெலிட் செய்யவும். தேவையில்லாத அப்ளிகேஷன்களை நீக்குவதன் மூலம் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைக்கும்.
நாள் ஆக ஆக உங்களுடைய அப்ளிகேஷன்கள் கேட்ச்ட் டேட்டாவை சேகரித்து அதனால் உங்கள் போனில் குறிப்பிடத்தக்க அளவு ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படும். அவை வீண் ஸ்டோரேஜை எடுத்துக் கொள்ளக்கூடும். எனவே உங்களுடைய போன் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு சென்று ஸ்டோரேஜ் அல்லது ஸ்டோரேஜ் மேனேஜ்மெண்ட் பிரிவில் உள்ள செக்ஷனில் உள்ள ‘Clear cached data’ என்பதை கிளிக் செய்யவும்.
image: Joe Fedewa howtogeek
மீடியா ஃபைல்ஸ் குறிப்பாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள், அதிக அளவு டிவைஸ் ஸ்டோரேஜை எடுத்துக் கொள்ளக்கூடிய ஃபைல்களை கிளவுடுக்கு நகர்த்துங்கள். அப்லோடு செய்த பிறகு உங்களுடைய சாதனத்தில் இருந்து அவற்றை நீங்கள் பாதுகாப்பாக டெலிட் செய்யலாம். இதனால் உங்களது நினைவுகள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்வதோடு உங்கள் ஸ்மார்ட்போனில் கூடுதல் ஸ்டோரேஜும் கிடைக்கும்.
டவுன்லோட் மற்றும் ஃபைல்களை சரியான முறையில் பராமரிக்கவும், உங்களுடைய டவுன்லோட் ஃபோல்டர் மற்றும் ஃபைல் மேனேஜரை அவ்வப்போது கண்காணித்து அதில் உள்ள தேவையற்ற ஃபைல்களை டெலிட் செய்யுங்கள்.
image: Shutterstock
ஒரு சில அப்ளிகேஷன் உங்களுடைய சாதனத்தில் குறிப்பிட்ட அளவு டேட்டாவை கட்டுப்படுத்துவதற்கான செட்டிங்ஸை வழங்குகிறது. அவ்வாறு இருக்கக்கூடிய அப்ளிகேஷன்களின் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு சென்று அதில் ஆஃப்லைன் கன்டென்ட், டவுன்லோட் குவாலிட்டி அல்லது கேட்ச்ட் சைஸ் போன்றவற்றை சரிபார்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |