காய்கறி இல்லாமல் சூப்பரான கிரேவி செய்ய தெரியுமா? இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க
பொதுவாக எல்லா நேரங்களிலும் வீட்டில் காய்கறிகள் இருக்காது. இந்த மாதிரி நேரங்களில் அவசரமாக ஏதாவது சமைக்க வேண்டும் என்ற தேவை ஏற்படும் போது பெரும்பாலான பெண்கள் குழம்பிவிடுவார்கள்.
காய்கறியே இல்லாமல் இலகுவாகவும் சுவையாகவும் 10 நிமிடத்தில் கிரேவி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். காய்கறியே இல்லாமல் செய்தால் சுவை எப்படி இருக்கும் என்ற யோசனையே வேண்டாம் டேஸ்ட் அல்டி மேட்டா இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் தேவையான அளவு
உளுந்தம் பருப்பு 1 தே. கரண்டி
கடலை பருப்பு 2 தே. கரண்டி
சீரகம் 1 தே. கரண்டி
மிளகு 1/4 தே. கரண்டி
ஏலம் 2
எள்ளு 1 தே. கரண்டி
முந்திரி பருப்பு 3
பட்டை 1
கிராம்பு 2
நறுக்கிய தேங்காய் துண்டு 5
கறிவேப்பிலை தேவையான அளவு
பெரிய வெங்காயம் 2
பூண்டு 4
கடுகு 1/ தே. கரண்டி
வெந்தியம் தே. கரண்டி
பச்சை மிளகாய்
இஞ்ஞி பூண்டு பேஸ்ட்
மிளகாய் தூள் 1 தே. கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
மசாலா தூள் 1 தே. கரண்டி
புளி அல்லது தக்காளி தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ,மிளகு ,ஏலம் ,எள்ளு , முந்திரி பருப்பு பட்டை, கிராம்பு ,நறுக்கிய தேங்காய் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
நன்கு வதங்கிய பின்னர் மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
நன்கு அரைத்த பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் வரும் வண்ணம் மீண்டும் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதன் பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடாகியவுடன் நறுக்கிய 2 பெரிய வெங்காயம், பூண்டு 4, கடுகு வெந்தயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்கு வதங்கிய பின்னர் மிளகாய் தூள் 1 தே. கரண்டி ,மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி ,மசாலா தூள் 1 தே. கரண்டி ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
நன்கு வதங்கிய பின்னர் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்து கெட்டியான பதத்தில் வரும் போது புளி கரைசல் அல்லது நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறிவிட வேண்டும் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் சூப்பரான கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |