கெட்ட கொழுப்பை கரைத்து உடலை சிலிம்மாக மாற்றும் இலவங்கப்பட்டை- இப்படி செய்து பாருங்க
மசாலா பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படும் இலவங்கப்பட்டை என்பது சின்னமோமம் எனும் மரங்களின் உட்புற பட்டையிலிருந்து பெறப்படுகிறது.
இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளுக்கு சுவை, மணம் வழங்குவதற்கு பயன்படுத்தும் முக்கிய பொருளாகும்.
இப்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளை எப்படி எடை குறைப்பிற்கு பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.
அப்படியாயின் இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இலவங்கப்பட்டை எடை இழப்புக்கு எப்படி உதவுகிறது?
1. இலவங்கப்பட்டை நார்ச்சத்து அதிகம் கொண்ட பொருளாக பார்க்கப்படுகின்றது. இது உணவை திருப்திபடுத்தும் வேலையை செய்கிறது. இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க செய்கிறது.
2. இலவங்கப்பட்டை முக்கிய நோய்களுக்கு பாதிப்பு வராமல் கட்டுபடுத்தும் வேலையை செய்கிறது.
3. இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த உறைதல் ஆபத்து மற்றும் அசாதாரண கொலஸ்ட்ரால் அளவுகள் கொண்டிருப்பவர்களின் உடல் பருமனை குறைக்கும் வேலையை இலவங்கப்பட்டை செய்கிறது.
இலவங்கப்பட்டை தண்ணீர்
தேவையான பொருள்கள்
இலவங்கப்பட்டை சிறிய அளவு அல்லது இலவங்கப்பட்டை பொடி - 1 அல்லது ஒரு டீஸ்பூன் பொடி
தண்ணீர் - 1 லிட்டர்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை துண்டுகள் - தேவையெனில்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து அதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அதில், இலவங்கப்பட்டை குச்சி சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரில் இலவங்கப்பட்டையை போட்டால் கசப்பு சுவை இல்லாமல் போய் விடும்.
சிறிது நேரம் அடுப்பில் வைத்து விட்டு இறக்கவும்.
இலவங்கப்பட்டை 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து 15 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வைத்திருக்கவும். தண்ணீர் குளிர்ந்த நிலையில் இருக்கும் போது ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை பழம் சேர்க்கலாம்.
தேவை ஏற்பட்டால் இதில் இஞ்சி, மிளகு, ஏலக்காய் மற்றும் புதினா இலைகளையும் சேர்க்கலாம்.
முக்கிய குறிப்பு
தண்ணீர் சூடாக இருக்கும் பொழுது தேன் சேர்ப்பதை குறைத்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |