செப்பு பாத்திரங்கள் கருப்பாக இருக்கிறதா? பளபளப்பாக மாற்ற இந்த முறையை பயன்படுத்தி பாருங்க
பொதுவாகவே வீட்டில் சமைக்கும் போது பாத்திரங்கள் அடிப்படிப்பது வழக்கமான தொன்றுதான் ஆனால் அவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினமானது.
இவற்றை சுத்தம் செய்யும் போது சிலநேரங்களில் பாத்திரங்கள் விரைவில் உபயோகம் இல்லாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதிலும் செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை உபயோகப்படுத்தும் போது அவை கருப்பாக மாறிவிடும்.
இந்தப்பிரச்சினைகளை விரைவில் சரி செய்ய சிலப் பொருட்களைக் கொண்டு உடனடியாக பாத்திரங்களை பளபளப்பாக மாற்றலாம்.
கருப்பான பாத்திரங்களை மாற்ற
செம்பு மற்றும் பித்தளைப் பாத்திரங்களை இலகுவில் அதே நிறத்தில் மாற்றுவதற்கு ஒரு பாத்திரத்தில் சிட்ரிக் அமிலம் மற்றும் உப்பை சம அளவில் எடுத்து ஒரு கப் தண்ணீரில் உப்பு கரையும் வரை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.
இந்தக் கரைசலைக் கொண்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் பித்தளை மற்றும் செப்பு பாத்திரங்கள், பூஜை சாமான்கள் என்வற்றை இந்தக் கரைசல் மூலம் சுத்தம் செய்தால் பாத்திரங்கள் பளபளப்பாக மாறும்.
அல்லது கருப்பாக இருக்கும் பாத்திரத்தின் மேல் உப்பு தெளித்து சிறிய அளவு வினிகரை உப்பு மீது ஊற்றி ஒரு துணி தேய்த்து தேவையான அளவு வினிகர் சேர்த்தால் பாத்திரங்கள் பளிச்சென மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |