ஒரு மாதத்திற்கு நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
உடல் உறுப்புக்களில் மிக முக்கியமானது நாக்கு என மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனின் நாக்கை பார்த்து நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளீர்கள் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
தினமும் நாக்கை சுத்தம் செய்வது அவசியம் என கூறுவார்கள். பேச்சு, வாய் சுகாதாரம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விடயங்கள் நாக்கில் தங்கியிருக்கின்றன.
ஒருவர் காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பொழுது நாக்கை அவசியம் சுத்தம் செய்ய வேண்டும். சுமாராக ஒரு மாதம் சுத்தம் செய்ய மறந்துவிட்டால் அது நோய்நிலைமைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், ஒரு மாதம் நாக்கை சுத்தம் செய்யாவிட்டால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
உண்மையில் என்ன நடக்கும்?
நாக்கு நமது அன்றாட வாழ்க்கையில் அதிகம் முக்கியம் பெறுகின்றது. வழக்கமாக நாக்கை சுத்தம் செய்வதால் மேற்பரப்பில் இயற்கையாகவே சேரும் பாக்டீரியாக்கள், உணவுக் குப்பைகள் மற்றும் இறந்த செல்களை இல்லாமல் போகும்.
பலன்கள்
1. சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும். இது வாய் சுகாதாரத்தில் விடும் தவறுகள் கூட காரணமாக இருக்கலாம். அப்படியாயின், நாக்கை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம்.
2. எவ்வளவு சுவையான உணவுகள் சாப்பிட்டால் அதன் முழு சுவை உணர முடியாத நிலை சிலருக்கும் இருக்கும். வழக்கமாக காய்ச்சல் நேரங்களில் சுவையை நம்மாள் உணர முடியாது. இதுவே நாக்கை சுத்தமாக வைத்திருப்பதால் நாக்கால் சுவையை உணரலாம்.
3. வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாக உள்ளன. இவை வயிற்றுக்குள் சென்று வேறு விதமான நோய்களையும் ஏற்படுத்தும். இதனால் நாக்கில் கொஞ்சம் கவனம் தேவை.
4. ஆரோக்கியமான செரிமானம் தேவை என நினைப்பவர்கள் உங்களின் வாய் சுகாதாரத்தை ஆரோக்கியமாக பேணுவது அவசியம். செரிமான கோளாறுகள் கூட உங்களின் நிலையை மோசமாக்கலாம்.
5. சுத்தமான நாக்கு உங்கள் வாயை புத்துணர்ச்சி கொடுத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் வாயில் கோளாறுகள் வருவது குறைவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |