கருமையான வெள்ளி கொலுசை புதிது போன்று மாற்றனுமா? 5 நிமிடத்தில் நிகழும் அதிசயம்
வெள்ளிக் கொலுசு கருத்துப் போன நிலையில் இருந்தால், அதனை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெண்கள் அணியும் நகைகளில் வெள்ளி நகைகளும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் கருகருவென இருக்கும் வெள்ளி நகைகளை மிகவும் சுலபமாக எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - பாதியளவு
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
தக்காளி கெட்சப் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
டூத் பேஸ்ட் - சிறிதளவு
பயன்படுத்தும் முறை
முதலில் உருளைக்கிழங்கை தூருவி அதனை பாத்திரம் ஒன்றில் எடுத்துக் கொள்ளவும். பின்பு பாத்திரம் ஒன்றில் கொலுசு முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு பேக்கிங் சோடாயை அதனுடன் சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா மற்றும் உருளைக்கிழங்கு இவை இரண்டும் நீருடன் வினைபுரிந்து கொலுசில் படிந்திருக்கும் கருமையை போக்கும்.
பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, சிறிது நேரம் அப்படியே வைத்துவிடவும். கொலுசின் மேற்பரப்பில் படிந்திருக்கும் கருமை படிப்படியாக நீங்கும்.
இரண்டாவது முறையாக கொலுசு சூடான தண்ணீரில் இருக்கும் சமயத்தில், கிண்ணம் ஒன்றில் தக்காளி கெட்சப், டூத் பேஸ்ட் சேர்த்து நன்றாக பசை போன்று உருவாக்கவும்.
தக்காளியில் இருந்து வெளியேறும் வெள்ளி கொலுசில் இருக்கும் கருமையை போக்கி பளபளப்பாக வைக்கின்றது.
இப்போது தண்ணீரில் ஊறிருக்கும் வெள்ளி கொலுசை எடுத்து அதன் மீது தயாரித்து வைத்த பசையை தடவி ஒரு டூத் பிரஸ் கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும்.
இப்படி நீங்கள் தேய்க்கும் போது வெள்ளி கொலுசு மீது படிந்திருக்கும் கருமை நீங்கி வெள்ளி கொலுசு புதுசு போல மின்னுவதை காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |