வீட்டில் பூஜை பொருட்கள் கறுத்து விட்டதா? இந்த இரண்டு பொருள் யூஸ் பண்ணி பாருங்க
வீட்டில் இருக்கும் பூஜை பொருட்கள் பொலிவிழந்து கருப்பாகி விட்டால் அதை வீட்டில் உளள இரண்டு பொருட்கள் மூலம் மீள கொண்டு வரலாம்.
பூஜை பொருட்களின் பெலிவை மீட்க
பூஜை அறை மிகவும் புனிதமான ஒரு இடமாகும். இங்கு பூஜை பொருட்கள் சுத்தமாக இருப்பது அவசியம். பொதுவாக இந்த பாத்திரங்கள் பித்தளை கொண்டே செய்யப்பட்டிருக்கும்.
பித்தளை பாத்திரங்கள் எளிதில் வளியில் மங்கி போக கூடியவை. அப்படி கருத்துப் போன பூஜை சாமான்களை சுத்தம் செய்வதற்கு விலை கூடிய பொருட்கள் வாங்கி பயன்படுத்த தேவை இல்லை.
சில வழிமுறைகள் மூலம் பளபளப்பாக்கலாம். முதலில் பூஜை சாமான்களில் இருக்கும் பாசிகளை காட்டன் துணி அல்லது பேப்பர் வைத்து துடைத்து எடுக்கவும்.
பின்பு திருநீறு அல்லது கோலப்பொடி சேர்த்து துடைக்கவும். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். தண்ணீர் சூடானதும், அரை ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஷாம்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
பூஜை பொருட்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். இறுதியில் அவற்றை வெளியில் எடுத்து பார்த்தால் அவை புதியது போல காட்யளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |