கலப்படம் செய்த வெல்லத்தை எப்படி கண்டுபிடிப்பது?
வெல்லம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும் அதை கலப்படம் இல்லாமல் சாப்பிடுவது மிக முக்கியம். கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை பார்ப்போம்.

வெல்லம்
இந்திய உணவு வகைகளில் வெல்லம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகமானோர் சக்கரைக்கு பதிலாக இந்த வெல்லத்தையே பயன்படுத்துவார்கள்.
வெல்லம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதற்காக சக்கரைக்கு பதில் வெல்லம் சாப்பிடுகிறார்கள். ஆனால் சந்தையில் விற்கப்படும் வெல்லத்தில் சில நேரங்களில் சுண்ணாம்பு தூள், ரசாயனங்கள் அல்லது பிற பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கும்.

நிபுணர்களின் கூற்றுப்படி வெல்லத்தின் கலப்படத்தை வீட்டிலேயே கண்டுபிடிக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஒரு எளிய முறையை வழங்கியுள்ளது.
இந்த முறை மிகவும் எளிமையானது மற்றும் தண்ணீர் மட்டுமே தேவைப்படும். இந்த முறையை பயன்படுத்தி நாம் வெல்லத்தை சோதித்த பின் அதை உணவில் சேர்ப்பது இதனால் வரும் பல ஆபத்தை குறைக்கும்.

கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி?
வெல்லத்தை வாங்கி வந்ததன் பின்னர் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கிளாஸ் சுத்தமான தண்ணீரில் போட வேண்டும். சில நிமிடங்கள் அப்படியே விட்டு கவனித்து பாருங்கள்.
வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்து, எந்த எச்சத்தையும் விட்டு வைக்கவில்லை என்றால், அது தூய்மையான வெல்லம். அதில் சந்தேகம் தேவை இல்லை.
இதற்கு பதிலாக தண்ணீரின் அடிப்பகுதியில் துகள்கள் படிந்தால், அல்லது சுண்ணாம்புத் தூள் இருந்தால் அது கலப்படம் செய்யப்பட்ட வெல்லம்.

இது தவிர நீங்கள் வாங்கும் போதே வெல்லத்தின் தரத்தை அதன் நிறத்தை வைத்து அடையாளம் காணலாம். வெல்லத்தின் நிறம் அதன் தரத்தின் முதல் அறிகுறியாகும்.
வெல்லம் பொதுவாக தங்க பழுப்பு நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். இந்த நிறங்களை தவிர பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும் வெல்லம் கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் எனப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |