சிறுநீருடன் இரத்தம் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு... ஜாக்கிரதை
சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வந்தால் அது உடலில் குறிப்பிட்ட நோய் இருப்பதற்கான அறிகுறி என சொல்லப்படுகின்றது. அதை பற்றி வரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுநீருடன் ரத்தம் வருதல்
மருத்துவ ரீதியாக சிறுநீரில் இரத்தம் இருப்பது ஹெமாட்டூரியா என்று அழைக்கப்படுகிறது. இது புறக்கணிக்கக் கூடாத ஒரு அறிகுறியாகும். இதனால் சிறுநீர் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது கோலா நிறத்தில் மாறலாம்.
சிறுநீருடன் ரத்தம் கலந்து வருவதை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியாது. அதாவது ரத்த அணுக்களை. சிறுநீரின் நிறத்தில் மட்டுமே மாற்றம் இருக்கும். பரிசோதனை மூலமே இரத்ததில் ரத்தம் வருவதை சோதனை செய்து கண்டுபிடிக்க முடியும்.
சிறுநீருடன் ரத்தம் வருவது ஒரு தீவிர நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே சிறுநீரில் இரத்தம் தெரிந்தாலோ அல்லது பரிசோதனையின் போது கண்டறியப்பட்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

ஹெமாட்டூரியா என்பது
ஹெமாட்டூரியா (Hematuria) என்பது சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும் நிலையாகும். இது சிறுநீரகத் தொற்று, கற்கள், புற்றுநோய் அல்லது காயம் காரணமாக ஏற்படலாம்.
இந்த நிலைமைகளில், சிறுநீர் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது கோலாவைப் போல மாறக்கூடும். உங்களுடைய சிறிதளவு இரத்தம் கூட நிறத்தை மாற்றலாம். சில நேரங்களில் சிறுநிர் வரும் போது இரத்தக் கட்டிகளும் வெளியேறக்கூடும், இது அதிகமான வலியை ஏற்படுத்தும்.
Hematuria வந்தால் அதற் வேறு அறிகுறிகளும் காட்டும்.

இந்த நோயின் வேறு அறிகுறிகள்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்,
- சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி,
- திடீரென சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல்,
- காய்ச்சல்,
- குளிர்,
- இடுப்பு அல்லது அடி வயிற்றில் வலி,
- சிறுநீரில் இரத்தக் கட்டிகள் வெளியேறுதல் இந்த அறிகுறிகள் மிகவும் வேதனையாக இருக்கும்.

எந்த நோய்க்கான அறிகுறி?
சிறுநீருடன் ரத்தம் வரும் (Hematuria) என்பது சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக தொற்று, சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை கல், பெரிதாகிய புரோஸ்டேட், சிறுநீரக நோய் அல்லது காயம் அல்லது அதிக உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றால் ஏற்படுகின்றது.
சிறுநீரில் ரத்தம் வருவது சிறுநீர்ப்பை புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

யார் மிக கவனமாக இருக்க வேண்டும்
எனவே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள், குடும்பத்தில் யாருக்காவது இந்த பிரச்சனை உள்ளவர்கள், இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் அல்லது சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்பவர்கள் அல்லது புகைபிடிப்பவர்கள் போன்றோருக்கு ஹெமாட்டூரியா ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.
நீங்கள் இதுபோல கொஞ்சம் அறிகுறி தெரிந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியம். அப்படி இல்லை என்றால் தீவிர வேதனையுடன் இந்த நோய் அறிகுறி வீரியமடையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |