வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமா என கண்டறிவது எப்படி?
தங்கத்தின் மீதான மதிப்பு எப்பொழுதும் குறைந்தே இல்லை. அன்றாடம் தங்கம் விலை உயர்வை கண்டு வரும் நிலையில் அந்த தங்கத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் உண்மையில் சுத்தமான தங்கமா என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
தங்கத்தில், செம்பு, துத்தநாகம், வெள்ளி போன்றவை கலக்கப்படுகிறது. இந்த கலப்படம் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியாக இருக்கும். இதனால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நாம் வாங்கும் தங்கத்தை கண்டறியலாம்.
தங்க நகைகளில் சில துளி வினிகரைத் தெளித்துப் பாருங்கள். அதன் நிறத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது போலியானது என்று உறுதிசெய்யலாம். மாற்றமே இல்லை என்றால் அது சுத்தமான தங்கம்.
அடுத்த முயற்சியாக, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்க நகையைப் போடுங்கள். அந்த நகை உடனடியாக மூழ்கினால் அது உண்மையான தங்கம்.
ஆனால், சிறிது நேரம் மிதந்தால் அது போலியானது. தங்கம் எவ்வளவு இலகுவாக இருந்தாலும், எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும், அது எப்போதும் தண்ணீரில் மூழ்கும் தன்மையைக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முக்கியமாக தங்கத்தில் கலப்படம் இருப்பதைத் தவிர்க்க எப்போதுமே ISI முத்திரை இருப்பதைப் பார்த்த பின்னரே தங்கத்தை வாங்க வேண்டும்.