காலாவதி தேதி இருக்கு.. மொபைல் சார்ஜர் பற்றி உங்களுக்கு தெரியாத விடயம்
தற்போது விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்கள் போன்களுக்கான சார்ஜர்களை வழங்குவதில்லை. மாறாக நாம் அதற்கான சார்ஜரை வெளியில் இருந்து பெற்றுக் கொள்ளும் அவசியம் உள்ளது.
உதாரணமாக, ஃபிளாக்ஷிப் (flagship models) மாடல்களுக்கு சார்ஜர் வழங்குவதில்லை என பயனர்கள் கூறுகிறார்கள். ஸ்மார்ட் போன்கள் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
நாளாந்த தேவைகளான ஆன்லைன் பணம் செலுத்துதல், ஷாப்பிங் செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்தல் உள்ளிட்ட பல வேலைகளை போன்களை பயன்படுத்தி செய்து வருகிறோம்.
அதனால் போன்களை விரைவாக சார்ஜ் ஏற்றும் நம்பகத்தன்மையுடைய சார்ஜர்கள் பயன்படுத்த வேண்டும். தற்போது சந்தையில் உயர்தர அசல் சார்ஜர்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், போன்களின் சார்ஜர் பற்றிய நமக்கு தெரியாத விடயங்களை தொடர்ந்து பதிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
காலாவதி தேதி கண்டுபிடிப்பது எப்படி?
1. சந்தையில் சில தரம் குறைந்த சார்ஜர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் தொலைபேசி அதிகமாக வெப்பமடைதல், பேட்டரி செயல்திறனில் சரிவு, தொலைபேசி வெடிக்கும் ஆபத்து உள்ளிட்டவை நடக்கிறது. இதனை தடுப்பதற்கு தரம் உயர்ந்த சார்ஜர்களை பார்த்து வாங்க வேண்டும்.
2 உங்களுடைய தொலைபேசிகளில் BIS Care செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி Android மற்றும் iOS பயனர்கள் பயன்படுத்தலாம். இந்த செயலில் உள்ள முகப்புக்கு சென்று அங்கு கொடுக்கப்படும் விருப்பங்களை தெரிவு செய்யவும்.
3. அதன் பின்னர், Verify R no. CRS என்பதனை தேர்வு செய்ய வேண்டும். அப்போது இரண்டு விருப்பங்கள் காட்டும், அதற்கு நீங்கள் தயாரிப்பு பதிவு எண்ணை உள்ளிட்டு, சார்ஜரில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
4. இப்படி செய்தால் உங்கள் சார்ஜரின் அனைத்து தகவல்களும் சரிப்பார்க்கப்படும். சார்ஜர் பற்றிய விரிவான தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் வாங்கிய சார்ஜரின் பதிவு எண் அல்லது QR குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அதில் சார்ஜரின் காலாவதி தேதியும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |