படமெடுத்து சீறிய நாகபாம்பு! அசால்டாக பிடித்த இளம்பெண்ணின் பகீர் காட்சி
படமெடுத்து சீறி வந்த பாம்பு ஒன்றினை பெண் ஒருவர் லாவகமாக பிடித்து போத்தலுக்குள் அடைத்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீறி வந்த பாம்பு
'பாம்பு' என்ற பெயரே பலரை அச்சத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. மேலும் பாம்பு பற்றிய பல காணொளிகள் இணையத்திலும் பயங்கர வைரலாகி வருகின்றது.
இங்கு பெண் ஒருவர் துணிச்சலாக செயல்பட்டு பெரிய பாம்பு ஒன்றினை பிடிக்கும் காட்சியினைக் காணலாம். சாதாரணமாக நமது எதிரே பாம்பு வந்தால், உடனே பீதியில் நடுக்கம் ஏற்பட்டுவிடும்.
ஆனால் குறித்த பெண் பாம்பின் வாலை ஒரு கையினால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் பிளாஸ்டிக் போத்தலினும் பாம்பினை லாவகமாக விடுகின்றார். இந்த காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெண்ணின் பயமில்லாத செயலைக் கண்ட பெரும்பாலான பார்வையாளர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
How to catch snake... Brave girl! pic.twitter.com/nxT0a5Jxfe
— Figen (@TheFigen_) January 10, 2023