முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினையா?இதோ சில இயற்கை தீர்வுகள்!
பெண்களை பொருத்தவரையில் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அதனை சீர்குலைக்கும் வகையில் சில பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் தன்மை அதிகமாக காணப்படும்.
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இதனால் என்னதான் நல்ல மேக்கப் பொருட்களை பயன்படுத்தினாலும் குறுகிய நேரத்திலேயே முகம் சோர்வாகவும் பொலிவிழந்தும் காணப்படும்.இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எளிய டிப்ஸ்
கட்டாயமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை முகம் கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.அது சருமத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை அகற்றுவதற்கு பெரிதும் துணைப்புரியும்.
உங்கள் சரும பராமரிப்பு பொருட்கள் எண்ணெய் சருமத்துக்கு உகந்ததா என்பதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும். சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க எண்ணெய் தன்மை அற்ற மாய்ஸ்சரைசரைப் உபயோகிக்க வேண்டும்.
உங்களின் அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அது சரும பொலிவை மேற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். அதிக இனிப்பு பொருட்களையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் பத்து கிளாஸ் தண்ணீரை குடிப்பதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும். இது சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பதற்கு உதவும்.
அடிக்கடி உங்களின் முகத்தில் கை வைப்பதை தவிர்த்துக்கொள்வதும் நல்லது.இது பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும்.
இவற்றையெல்லாம் கடைப்பிடித்து கூடவே முல்தானி மிட்டி ஃபேஸ் பேக், எலுமிச்சை சாறு அல்லது கற்றாழை ஜெல்லை முகத்தில் பயன்படுத்தி வருவதால் முகத்தில் எண்ணெய் வலியும் பிரச்சினையை எந்த வித பக்கவிளைவுளும் இன்றி கட்டுப்படுத்த முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |