வீட்டில் இருந்து வேலை பார்த்து தொப்பை பெரிதாகிவிட்டதா? சட்டுன்னு குறைக்க இதை செய்ங்க
கடந்த காலத்தில் கொரோனா தொற்று பரவியதைனால் மக்களின் நலக்கருதி தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது.
இதன் பின்னர் இந்த முறை பலபேருக்கு எளிமையாக இருப்பதனாலும் அலுவலகத்திற்கு செல்வதற்காக செலவு குறைவதனாலும் தற்போது வரையில் பலரும் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு வேலை செய்வது மிகவும் வசதியானது என்றாலும் இளைஞர்களிடையே எடை அதிகரிப்பதற்கும் தொப்பை பிரச்சினைக்கும் இது மிகப்பெரிய காரணமாக இருக்கின்றது.
வீட்டில் இருந்த வேலை பார்ப்பது எந்தளவுக்கு பொருளாதாரத்தில் சாதக தன்மையை கொண்டிருக்கின்றதோ அதே அளவுக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றால் மிகையாகாது.
வீடடில் இருந்து வேலை பார்ப்பவர்கள் உடல் உடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் தொப்பையை குறைக்கவும் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
அவ்வப்போது நடக்கவும்
பொதுவாகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைப்பயிச்சி மிகவும் முக்கியத்துவம் பெருகின்றது. ஒரே இடத்தில் 8 முதல் 10 மணி நேரம் வரை தொடர்ச்சியாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் தொப்பை அதிகமாகிவிடும்.
அதனை தவிர்த்துக்கொள்ள ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 5 நிமிடங்கள் எழுந்து கொஞ்சம் நடந்துவிட்டு வேலை பார்ப்பதால் சோர்வு இல்லாமல் போவதுடன் தொப்பை ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவடைகின்றது.
தண்ணீர் குடிக்கவும்
வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது உணவு சாப்பிடுவதும் அடிக்கடி நொருக்கு தீனிகளை சாப்பிடுவதும் அதிகமாக இருக்கும். அதனால் தொப்பையும் உடல் எடையும் விரைவாக அதிகரித்துவிடுகின்றது.
எனவே, இதைத் தவிர்க்க, வேலை செய்யும் போது முடிந்தவரை அவ்வப்போது தண்ணீர் குடிக்க பழகிக்கொள்வது சிறந்தது. அதனால் பசி குறைவதுடன் தொப்பை மற்றும் இடுப்பை சுற்றி அதிகரிக்கும் கொழுப்பைக் கட்டுப்டுத்த முடியும்.
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8 கிளாஸ் தண்ணீராவது கட்டாயம் குடிக்க வேண்டும். காலை எழுந்தவுடன் முதலில் வெதுவெதுப்பான தண்ணீதை குடிக்க உடலை பழக்கப்படுத்த வேண்டியது அவசியம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்
வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் தொப்பை பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்.
மேலும் நார்சத்து நிறைந்த உணவுகள் அதிக நேரம் பசியை கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. இந்த உணவுகள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெரிதும் துணைப்புரிகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |