தேவையற்ற Spam Call பிரச்சனையை தடுப்பது எப்படி? முழு விபரம் இதோ
ஸ்மார்ட்போனில் அடிக்கடி வரும் ஸ்பேம் அழைப்புகளுக்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் பலருக்கும் தொல்லை கொடுத்து வருகின்றது. இவை தினசரி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமின்றி, மோசடிகளுக்கும் வழிக்குகின்றது.
தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் தேவையற்ற அழைப்புகளை எவ்வாறு தடுப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
national Do Not Call registry பதிவு செய்யுங்கள்:
Spam அழைப்புகளைத் தடுப்பதற்கு உங்களது எண்ணை தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
இது முன்பு தேசிய டூ நாட் கால் பதிவேடு (NDNC) என்று அழைக்கப்பட்டது. இந்த சேவை, டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைப் பெறுவதைத் தவிர்க்க பயனர்களை அனுமதிக்கிறது.
உங்களது SMS பயன்பாட்டைத் திறந்து "START" என்று டைப் செய்து 1909 க்கு அனுப்பவும். வங்கி, விருந்தோம்பல் போன்ற பல்வேறு பிரிவுகளின் பட்டியலைப் பெறுவீர்கள்.
இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்துவமான குறியீடு இருக்கும் நிலையில், நீங்கள் தடுக்க விரும்பும் அழைப்புகளின் வகைக்குரிய குறியீட்டை பதில் அளிக்கவும்.
பின்பு உறுதிபடுத்தும் செய்தியை பெறுவீர்கள். இந்த சேவையானது 24 மணி நேரத்திற்கும் செயல்பட ஆரம்பித்து வரும்.
அதாவது வங்கி போன்ற அத்தியாவசிய எச்சரிக்கையைப் பாதிக்காமல், மூன்றாம் தரப்பினரிடமிருந்து வரும் தேவையற்ற வணிக அழைப்புகளை இது தடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |