உங்க போன் ரொம்ப சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க

Smart Phones
By Vinoja Oct 30, 2023 07:38 AM GMT
Report

பொதுவாகவே தற்காலத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றோம். இப்போதெல்லாம் குழந்தைகளும் கூட போனுடன் தான் விளையாடுகின்றார்கள். இது தவிர்க்க முடியாத விடயமாக எமது வாழ்வியலோடு இயைந்துவிட்டது என்றால் மிகையாகாது. 

ஆனால் தற்போது அதிக வெப்பமடைந்து ஸ்மார்ட்போன்கள் வெடித்ததாக அடிக்கடி செய்திகள் வெளியாவதை அறிந்திருப்பீர்கள்.

ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாகும் பிரச்சினையை பயனாளிகள்  பலரும் அனுபவித்திருப்பீர்கள்.

சில ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் திரையைத் தொட்டாலே கொதிக்கும் அளவுக்கு வெப்பமடைந்திருக்கும்.

உங்க போன் ரொம்ப சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க | How To Avoid Overheating Of Smartphones

சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, போனைக் கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம்.

நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் கூட, அதிலிருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசௌகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்சினை  உண்டு.

எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்தை கொடுக்கும்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


நாம் கையில் வைத்து பயன்படுத்தும் ஸ்மார்ட்போனானது, அதனினுள் இருக்கும் மின்னணு பொருள்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பத்தை வெளியேற்றுகிறது. இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில் தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன.

உங்க போன் ரொம்ப சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க | How To Avoid Overheating Of Smartphones

அப்படி இருந்தாலும் கூட, ஸ்மார்ட்போனின் வேகமும், செயல்பாடும் அது சூடாவதால் குறைகிறது. மேலும் அதிகமாக சூடாவதால் போன் வெடிக்கும் அல்லது தீப்பிடிக்கும் அபாயம் ஏற்படுகின்றது. இதனை தடுக்கும் அல்லது குறைக்கும் சில வழிமுறைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

போன் சூடாவதை தடுக்க... 

உங்கள் மொபைலை எப்போதுமே 100% பேட்டரியுடன் தான் வைத்திருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

எனவே 80 முதல் 90% அளவுக்கு பேட்டரி அளவு இருந்தாலே போதுமானது தான். சார்ஜ் போடும் போது நாம் செய்யும் இன்னொரு தவறு, முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே போனை விட்டுவிடுவது. இது போன் அதிகம் சூடாவதற்கு காரணமாக அமையும்.

உங்க போன் ரொம்ப சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க | How To Avoid Overheating Of Smartphones

இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான் பலரது பழக்கமாக உள்ளது. இப்படி தேவையில்லாமல் சார்ஜ் செய்வதும், போன் சூடாக ஒரு காரணம்தான். போன் பேட்டரி அளவை 30% முதல் 90% வரை எப்போதும் வைத்திருப்பதே, பேட்டரியின் ஆயுளுக்கும் நல்லது என்பதை எப்போதும் பின்பற்றுவது போன் அதிகமாக சூடாவதை தவிர்க்கும். 

உங்க போன் ரொம்ப சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க | How To Avoid Overheating Of Smartphones

புது போன் வாங்கியதுமே, அதனை பாதுகாக்க ஏதேனும் கவர் வாங்கி போடுவது தான் அனைவரினதும் வழக்கம். அது போனின் பாதுகாப்பிற்கு நல்லது தான் என்பதை மறுக்கவில்லை. அதே சமயம், போனின் வெப்பம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைகின்றன.

நீண்ட நேரம் கேம் விளையாடும் போதோ, அல்லது இணையம் பயன்படுத்தும் போதோ மொபைல் அதிகம் சூடாகி விடும். அதுபோன்ற சமயங்களில் உங்கள் போன் கவரை கழற்றி விடுங்கள். கவரை தேர்வு செய்யும்பொழுது, ரப்பர் அல்லது கண்ணாடியால் ஆன கவரையே தேர்வு செய்வது வெப்பத்தை குறைக்க உதவும்.

படுக்கைக்கு அருகில் தண்ணீர் போத்தல் வைக்கக் கூடாதாம்! காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

படுக்கைக்கு அருகில் தண்ணீர் போத்தல் வைக்கக் கூடாதாம்! காரணத்தை தெரிஞ்சிக்கோங்க


பிளாஸ்டிக் அல்லது பாலிகார்பனேட் கவர்கள் வெப்பத்தை வெளியேற்றாது. ஜிபிஎஸ், இணையம், ப்ளூடூத் அதிக நேரம் மொபைல் டேட்டா மூலம் பதிவிறக்கம் செய்வது அல்லது இணையத்தில் உலாவுவது உங்கள் ஸ்மார்ட்போனை சூடாக்கும். எனவே சிறிய இடைவெளிகளுக்கு பிறகு உங்களுக்கு தேவையானவற்றை பதிவிறக்கம் செய்யலாம். வைஃபை இருந்தால், அதையே பயன்படுத்துவது சிறந்தது. 

உங்க போன் ரொம்ப சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க | How To Avoid Overheating Of Smartphones

மொபைல் டேட்டாவை விட, குறைவான திறனே, வைஃபை எடுத்துக்கொள்ளும். உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை உறிஞ்சும் லொகேஷன் அல்லது ஜிபிஎஸ், ப்ளூடூத், மொபைல் டேட்டா ஆகியவற்றை தேவையில்லாத நேரங்களில் ஆப் செய்து வைப்பது போன் சூடாவதை தவிர்க்கும். 

இது மட்டுமின்றி போன் சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் போதே பயன்படுத்துவது, திரையிம் ஒளி அளவை (Brightness) அதிகம் வைப்பது, பின்னால் இருந்து செயலாற்றும் செயலிகள் ஆகியன மின்சக்தியை வீணாக்குபவை. இவற்றை முடிந்தளவு குறைத்தாலே அடிக்கடி போனை சார்ஜ் செய்ய அவசியமிருக்காது.

உங்க போன் ரொம்ப சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க | How To Avoid Overheating Of Smartphones

எனவே உங்கள் பேட்டரியின் ஆயுள் குறையாமல் இருக்கும். ஏதாவது பழுது ஏற்பட்டு மொபைல் போனின் பேட்டரியை மாற்றும் போது, எக்காரணம் கொண்டு போலியான அல்லது மலிவான பேட்டரிகளை வாங்க கூடாது.அது உங்கள் போனிற்கே ஆபத்தாக அமையலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும். சில நேரங்களில் அதிக வெப்பத்தினால் வெடிக்கும் அபாயம் காணப்படுகின்றது. 

உங்க போன் ரொம்ப சூடாகுதா? அப்போ இதையெல்லாம் பண்ணாதீங்க | How To Avoid Overheating Of Smartphones

சார்ஜர் விஷயத்திலும் இது பொருந்தும். உங்கள் மொபைல் போனோடு வந்த சார்ஜரை தவிர்த்து, வேறு ஏதேனும் தரமில்லாத சார்ஜர்களை பயன்படுத்துவதும் ஸ்மார்ட்போனுக்கு ஆபத்து தான். யூஎஸ்பி கேபிள் கொண்டு சார்ஜ் செய்யும் பயனர்களுக்கும் இது பொருந்தும். இவற்றை கடைப்பிடித்தால் போன் சூடாவது குறைந்துவிடும். 

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US