கடன் இல்லாமல் வாழ்வது எப்படி? இதையெல்லாம் செய்யாதீங்க
கடன் இல்லாமல் வாழ்வதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கடன் என்பது நமது வாழ்வில் கவனிக்காமல் நடக்கும் சில விடயங்களில் ஒன்றாகும். நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று உணர்ந்தாலும், கடன் சுமையில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்.
கடன் சுமையில் சிக்காமல் இருக்க...
பணம் கொடுத்து வாங்க முடியாத எந்தவொரு பொருளையும் கடனாக வாங்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு நீங்கள் வாங்கினால் அது கடனில் மூழ்க வைக்கும்.
கடன் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் குறைந்தது 6 மாத சம்பளத்தை கட்டாயம் சேர்த்து வைக்க வேண்டும். இந்த சேமிப்பானது நீங்கள் வேலையை இழந்தாலோ அல்லது மருத்துவ செலவு ஏற்பட்டாலோ பிறரிடம் கடன் வாங்காமல் சமாளிக்க உதவும்.
ஆடம்பரமாக பொருட்களை வாங்குவதையும், பிறரிடம் கடனாக பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஆடம்பரமாக பொருட்கள் எதுவும் வாங்காமல் இருந்தால் போதும்.
மாதாந்திர செலவுகளை பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும். வரவுக்கு மீறி செலவு செய்யாமல் சிக்கனமாக இருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், வீண் செலவு அதிகரிப்பதுடன், வீட்டில் தேவையற்ற பொருட்களையும் வாங்கி குவிப்பீர்கள்.
சம்பளம் அதிகரித்துவிட்டால் உடனே ஆடம்பரமான வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டாம். குறைந்த சம்பளத்தில் கட்டாயம் சேமிக்க பழக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |