மற்றவர்களுடன் ஏற்படும் வாக்குவாதத்தை தவிர்க்கணுமா? இதை பின்பற்றினாலே போதும்
பொதுவாகவே வாக்குவாதம் மற்றும் அதனால் ஏற்படும் பதகளிப்பை பெரும்பாலானவர்கள் விரும்புவது கிடையாது.
இருப்பினும் மற்றவர்களுடன் நெருங்கி பழகும் பட்சத்தில் நிச்சயம் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றது. அதற்கு பிரதான காரணம் இருவரின் கருத்துக்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு தான்.
ஒருவரடைய கருத்தக்கு எதிர் கருத்து தெரிவிக்கும் போதும் அல்லது ஒருவருடைய விருப்பம் மறுக்கப்படும் போதும் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றது.
இதை சாதாரணமாக பலரும் எடுத்துக்கொண்டாலும் வாக்குவாதம் உறவை முறிக்கும் அளவுக்கு அபாயகரமாக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
எனவே தான் வாக்குவாதம் ஏற்படுகின்ற பட்சத்தில் அவதானமாக வார்த்தைகளை பிரையோகிக்க வேண்டும்.
அந்த வகையில் மற்றவர்களுடன் ஏற்படுகின்ற வாக்குவாதங்களை முடிந்தளவு குறைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாக்குவாதங்களை தவிர்க்கும் வழிகள்
உறவுகள் நிலைக்க வேண்டும் என்றால் மற்றவர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்களை முடிந்தவரையில் தவிர்த்துக்கொள்ள முயற்ச்சிக்க வேண்டியது அவசியம்.
வாக்குவாதத்தை தவிர்ப்பதில் சிறச்த உத்தியாக அமைதியை கடைப்பிடிப்பது பார்க்ப்படுகின்றது. அதாவது எதிரில் இருப்பவர் என்ன கூறினாலும் நீங்கள் அமைதியாக இருக்கும் பட்சத்தில் வாக்குவாதம் ஏற்படுவது தடுக்ப்படுகின்றது.
வாக்குவாதம் ஏற்படப்போகின்றது என உணரும் போது யாராவது ஒருவர் அமைதியை கடைப்பிடித்தால் அந்த வாக்குவாதம் உடனடியாக தடைப்படும்.
மற்றவர்கள் உங்களை டென்ஷன் படுத்தும் போது நிதானத்தை கடைபிடிப்பதே சிறந்தது. பிரச்சினைகள் மற்றும் வாக்குவாதம் ஏற்படுகின்ற போது உறவுகளை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் வார்த்தையில் நிதானம் தேவை. எனவே வாக்குவாதத்தின் போது நிதானத்துடன் இருக்க முயற்ச்சி செய்யுங்கள்.
நீங்கள் அமைதியாக இருப்பதோல் எதிரில் இருப்பவர் நிதானமாக பேச ஆரம்பிப்பார். எனவே அங்கு வாக்குவாதம் பெரியளவில் செல்லாமல் தடுக்கப்படுகின்றது.
ஒருவருடைய கருத்தை முழுமையாக கேட்டு முடித்த பின்னர் நீங்கள் பேச ஆரம்பிக்கும் போது வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள முடியும். கருத்தை கூற முடியாதெ ஆவேசத்தில் தான் பெரும்பாலாக வாக்குவாதங்கள் பிரிவில் முடிகின்றது.
வாக்குவாதம் பெரியளவில் செல்லப்போகின்றது என்பதை உணரும் பட்சத்தில் அவ்விடத்தில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சியுங்கள் பின்னர் ஆறுதலாக புரியவைத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக வாக்குவாதங்களின் போதும் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை நிச்சயம் கொடுக்க வேண்டும். தவறான வார்ததை பிரயோகங்கள் தான் பெரும்பாலான நேரங்களில் வாக்குவாதத்தை அதிகரிக்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |