ஆப்பிள் கடிகாரத்தில் eSIM ஒன்றை எவ்வாறு செயற்படுத்துவது?
ஆப்பிள் கடிகாரத்தில் eSIM எனும் வசதி காணப்படுகின்றது, உண்மையில் பௌதீக ரீதியான சிம் அட்டை ஒன்றை பயன்படுத்தாது ஈ-சிம் ஒன்றை பயன்படுத்தி தொலைபேசி தொடர்பான சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு இந்த ஈ-சிம் வழிமைக்கின்றது.
இந்த வசதியானது ஆப்பிள் கடிகாரங்களில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 அல்லது அதற்கு பின்னர் வந்த மாடல்களில் செயல்படுத்திக் கொள்ள முடியும். watchOS 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஒபரேடிங் சிஸ்டம் கொண்ட கைக்கடிகாரங்களிலேயே இந்த வசதி தொழிற்படுத்த முடியும்.
இந்த eSIM வசதியை எனேபிள் செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு அருகாமையில் ஐபோன் இல்லாவிட்டாலும் தொடர்பாடல் மேற்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.
உடற்பயிற்சி செய்யும் போது அல்லது நடைபயிற்சி செய்யும் போது வீட்டிலேயே ஐபோனை விட்டு விட்டு இந்த கடிகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று தொடர்பாடல் மேற்கொள்வதற்கு இந்த eSIM உதவுகின்றது.
இந்த eSIMன்களை பயன்படுத்தி நேரடியாக தொலைபேசி அழைப்புகளை எடுக்கவும் பெற்றுக் கொள்ளவும் குறுஞ்செய்திகளை பெறவும் அனுப்பி வைக்கவும் முடிகின்றது.
இதன் போது உங்களுடைய ஆப்பிள் கடிகாரத்தில் சிம் அட்டை ஒன்று தேவைப்படுவதில்லை.
எவ்வாறு உங்களது ஆப்பிள் கடிகாரத்தில் எனேபிள் செய்வது?
உங்களது ஆப்பிள் ஐபோனில் வாட்ச் செயலியை ஓபன் செய்து கொள்ளவும் அதில் மொபைல் டேட்டா ஏதும் டேப்பை அழுத்தவும், உங்களது செயலியில் மொபைல் டேட்டா என்னும் டெப் இல்லாவிட்டால் உங்களது ஆப்பிள் வாட்ச் இஸ் வசதி அற்றது என்று அர்த்தப்படுகிறது.
உங்களது ஆப்பிள் வாட்ச் வாட்ச் அண்மைய OS வெர்ஷன்ஐ கொண்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
ஜெனரல் செட்டிங்ஸ்க்கு சென்று ஆப்பிள் ஒற்றை டாப் செய்து சாஃப்ட்வேர் அப்டேட்டை அழுத்துவதன் மூலம் உங்களுக்கு உங்களுடைய வெர்ஷனை அறிந்து கொள்ளலாம். அப்டேட்கள் ஏதும் செய்ய வேண்டி இருந்தால் அதனையும் நீங்கள் செய்து கொள்ள முடியும்.
மொபைல் டேட்டா என்னும் பகுதியில் எட் பிளான் ("Add a Plan") என்னும் பகுதியை டாப் செய்யவும் சப்போர்ட் செய்யக்கூடிய சேவையாளர்களின் பட்டியல் காட்டப்படும்.
உங்களுக்கு தேவையான சேவை வழங்குனரை நீங்கள் இதில் தெரிவு செய்து கொள்ள முடியும். ஒரு பிளானை ஆக்டிவேட் செய்து கொண்டதன் பின்னர் உங்களது ஆப்பிள் கடிகாரத்தின் செல்லுலர் டெப்பில் அந்த சேவை வழங்குனரின் பெயர் காணப்படும்.
வாட்ச் செயல்படுவதனை உறுதி செய்து கொள்வதற்கு செலியூலர் வலையமைப்பு ஒன்றுடன் கொள்வதனை உறுதி செய்யவும்.
ஆப்பிள் வாட்ச் செலியூலர் வளையமைப்பு ஒன்றுடன் இணைக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் நேரடித் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவும், பெற்றுக் கொள்ளவும், குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் முடியும்.
இதன் போது உங்கள் கைகளில் ஐபோன் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது, eSIM வசதியானது உங்களுடைய சாதாரண சிம் அட்டைகளின் கட்டண முறைகளுக்கு மாறுபட்டதாக அமையும் என்பதை நினைவில் கொள்க.