ஜிபி முத்துவிற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸில் முக்கிய போட்டியாளரான ஜிபி முத்துவிற்கு இரண்டு வாரங்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து இரண்டாவது வாரம் நிறைவடைந்துள்ளது. இதில் தற்போது சுமார் 19 போட்டியாளர்கள் காணப்படுகிறார்கள்.
மேலும் இந்த வீட்டிலே வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக ஜி.பி.முத்து பார்க்கப்பட்டார்.
ஆனால் இவர் கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அடம்பிடித்து வந்தார்.
ஜிபி முத்து
இதனை தொடர்ந்து யார் சமாதானப்படுத்தியும் ஏற்றுக்கொள்ளாத இவர், அவருடைய விருப்பப்படி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் ஜிபி முத்து இரண்டு வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு, சுமாராக இரண்டு இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.