நகை பிரியாரா நீங்க? சட்ட பிரகாரம் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்னு தெரியுமா?
பொதுவாகவே தொன்று தொட்டு முதலீட்டுக்கான சிறந்த வழிகளில் தங்கம் முக்கிய இடத்தை பெற்று வருகின்றது. தண்ணீரை காதலிக்தாத மீன்களும் தங்கத்தை காதலிக்காத பெண்களும் பூமியில் கிடையாது' என்றால் மிகையாகாது.
அதிலும் குறிப்பாக இந்திய பெண்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் காதல் உலனம் அறிந்தது தான். குறிப்பாக தமிழ் பெண்களை பொருத்தவரையில் சேமிப்பு என்றாலே அது தங்கம் வாங்குவதுதான் என்ற நினைப்பு அவர்கள் மத்தியில் இருக்கும்.

அப்படி சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கத்தை பலரும் நகையாகவோ, கட்டி தங்கமாகவோ வைத்திருப்பது வழக்கம்.
ஆனால், ஒரு வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதுதொடர்பான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்கலாம்.

சட்டப்பூர்வமாக ஒருவர் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம்?
இந்தியாவில் ஒரு தனிநபர் அல்லது ஒரு குடும்பம் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க முடியும் என்பதற்கு சட்ட வரம்பு எதுவும் இல்லை. நகைகளாகவோ, தங்க நாணயங்களாகவோ, தங்கப் பார்களாகவோ நாம் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
அதற்கு இந்தியாவில் சட்டப்பூர்வமாக எந்தவொரு வரம்பும் இல்லை. இருப்பினும், வரி தொடர்பான ஆய்வுகள் நடக்கும் போது வருமான ஆதாரம் இல்லாமல் நீங்கள் வைத்திருக்கும் தங்கம் தொடர்பாக சில விதிமுறைகள் காணப்படுகின்றது.

CBDT எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் இதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 500 கிராம் வரை ஆவணம் இல்லாமல் தங்கம் வைத்திருக்கலாம் என குறிப்பிடப்படுட்டுள்ளது.
அதேநேரம் திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் திருமணம் ஆகியிருந்தாலும் திருமணம் ஆகாவிட்டாலும் 100 கிராம் வரை மட்டுமே ஆவணம் இல்லாமல் வைத்திருக்கலாம்.

இவை அனைத்தும் ஆவணங்கள் இல்லாத தங்கத்திற்கான வரம்புகள் மட்டுமே. நீங்கள் முறையான வருமானம் மூலம் ஈட்டிய பணத்தில் எவ்வளவு தங்கம் வாங்கினீர்கள் என்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் வீட்டில் எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தை வைத்துக் கொள்ளலாம். அதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இதுவரையில் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |